பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

மாயா விநோதப் பரதேசி

தாழ்த்திக் கொண்டான். அவ்வாறு அவன் மையடர்ந்த தனது கூரிய கருவிழிகளால் பார்த்த மகா அழகான இனிய பார்வை மாசிலாமணியின் மனதை மயக்கி, உணர்வைக் கலக்கி, ஹிருதயத் திற்குள் ஊடுருவிப் பாய்ந்து அவனது உயிரைப் பருகிவிட்டுத் திரும்பி வந்தது. அவனது உள்ளம் பாகாய் உருகியது. வார்த்தைகள் குழறிப்போயின. காமவிகாரம் தலைக்கேறி உச்சிமயிரைப் பிடித்திழுத்தது. ஆயினும், தான் எழுந்து போய் அவளைக் கட்டிலிற்கு அழைத்துக் கொண்டு வரவேண்டுமென்ற துணிபு மாத்திரம் அவனது மனதில் உண்டாகவில்லை. தான் இன்னதைச் செய்வதென்பதை அறியாமல், அவன் சித்திப்பிரமை கொண்டவன் போலவும், கலக்கமும் ஆவலுமே வடிவெடுத்தது போலவும் சிறிது நேரம் ஸ்தம்பித்து அவனைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த பின்னர் மறுபடியும் துணிபடைந்து, "கண்ணு' என்னைப் பார்த்து விட்டு ஏன் அப்படியே நின்றுகொண்டு என்னவோ யோசிக்கிறாய்? நான் அங்கே வந்து உன்னை அழைத்துக்கொண்டு வர வில்லையென்று கோபித்துக் கொண்டு நிற்கிறாயா? இன்னம் எவ்வளவு நேரந்தான் நீ வெட்கப்பட்டுக்கொண்டு துரவே நிற்கப் போகிறாய்? உன் மனசார சம்மதப்பட்டு என்னை நீ கட்டிக் கொண்டாய். இன்று சோபன முகூர்த்தம் நடத்துவதற்கும் நீ இதுவரையில் இணங்கி இருந்தாய். அதற்காக இப்போது ஏழரை மணி முதல் வந்து இங்கே இருக்கிறாய். அதை எல்லாம் பார்த்தால், என்மேல் உனக்குப் பூர்த்தியான பிரியம் ஏற்பட்டிருக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது. அப்படி இருந்தும், யாரோ அன்னிய மனிதனைக் கண்டு பயந்து அருவருப்போடு தூர விலகி நிற்பவள் போல எங்கேயோ போய் மூலையில் நின்றுகொண்டிருக்கிறாயே! இது உனக்கு நியாயந் தானா? உன்னை நினைத்து நினைத்து என் பிராணன் எப்படித் துடிக்கிறதென்பதை நீ கொஞ்சமாவது உணரவில்லையே! அல்லது, உணர்ந்து தான், என்மேல் இரக்கங் கொள்ளாமல் இப்படி நிற்கிறாயா? உன் மனமென்ன கல்லினாலானதா? கண்ணே! நேரமாகிறது; முகூர்த்த காலம் தவறிவிடும் போல் இருக்கிறது. என் மனம் படும்பாட்டைக் கண்டு இரங்கி நீ வராவிட்டாலும், முகூர்த்தகாலம் தவறிப்போகக் கூடாது என்ற நம்மிருவருடைய நீடித்த நன்மையைக் கருதியாவது நீ வரக்