பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

205

இருக்கும்! ஸ்திரீகளின் ஜென்மம் என்ன ஜென்மம்! இரண்டுங் கெட்ட மகா துர்லபமான ஜென்மம். எந்த வழியிலும் போக முடியாத நிர்மூட ஜென்மம். பிறந்தால் ஆண்பிள்ளை சிங்கமாகப் பிறக்கவேண்டும். நான் பட்டணத்தில் இருப்பதால், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் படித்து மகா மேதாவியாய் விட்டேனென்று தாங்கள் நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. அப்படி ஒன்றுமில்லை. அங்கே இருக்கிறவர்களும் தங்களைப்போல ஆண் சிங்கங்கள் தானே! அவர்கள் மாத்திரம் தங்களுடைய உரிமைகளும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் விட்டுக்கொடுத்து விடுவார்களா? இங்கிலீஷ் காரரிடம் உத்தியோகம் பெறவோ, அல்லது, வர்த்தகம் முதலிய இதர ஜீவனோபாபங்களில் அவர்களது தயவை நாடியோ இருந்து அவர்களைப் போலத் தாமும் நடப்பதாகக் காட்டிக் கொள்ளும் சிலர் தான் அந்த மாதிரி நடந்து கொள்ளு கிறார்களே அன்றி, எல்லோரும் தங்களுடைய பெண்களுக்கு இங்கிலீஷ் கற்பிக்கிறதுமில்லை. தங்களுக்குச் சமதையான மரியாதையையும் கொடுக்கிறதில்லை. என் தகப்பனார் என்னைப் பள்ளிக்கூடத்திலேயே வைக்கவில்லை. அவருடைய மனப்போக்கு ஒரு மாதிரியானது; ஸ்திரீகள் ஆண் பிள்ளைகளுக்குச் சமதையாகப் படித்து, அவர்களுக்குச் சமதையாக அறிவு, யூகம் முதலியவைகளை அடைவதும், அவர்களுக்குச் சமதையான மரியாதையைப் பெறுவதும் சில அம்சங்களில் நன்மையாகத் தோன்றுகின்றனவானாலும், முக்கியமான அம்சங்களில் பெருந் தீங்காக மூடிகின்றனவென்பது என் தகப்பனாருடைய அபிப்பிராயம். ஆண்பிள்ளைகளுக்குத் தேக பலம், புத்தி தீக்ஷண்யம் முதலிய அம்சங்களினால் கவர்ச்சியும் மேம்பாடும் ஏற்படுகின்றன. அந்த இரண்டு அம்சங்களும் இல்லாவிட்டால், அவர் களுக்கு மதிப்புண்டாகாது. ஸ்திரீகளுக்கு அழகு, மிருதுத் தன்மை, அடக்கம், பணிவு, அறியாமை, மூடத்தனம், பலமின்மை முதலிய குணங்களால் கவர்ச்சியும் மேம்பாடும் ஏற்படுகின்றன. கடவுள் இந்த இருதிறத்தாரையும் இப்படி வெவ்வேறு மாதிரியான அமைப்பாகப் படைத்திருப்பதன் நோக்கம், ஒருவரையொருவர் சார்ந்து, ஒருவரது உதவியை மற்றவர் நாடி, ஒருவருக்கொருவர் ஆதரவாயிருந்து, இருவரும் ஒற்றுமையாக இல்லற வாழ்க்கையை