பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

மாயா விநோதப் பரதேசி

கூச்சலிட்டாலும் இடலாம். இந்த அசந்தர்ப்ப வேளையில், உங்களோடு அந்த அம்மாள் சந்தோஷமாகவாவது சிநேகபாவ மாகவாவது பேசுவாள் என்று நீங்கள் எதிர்பார்ப்பது சரியல்ல. இப்போது நீங்கள் போய் அந்த அம்மாளுக்குத் தொந்திரவு கொடுத்து, உங்களுடைய மனதையும் புண்படுத்திக் கொள்வதை விட நீங்கள் உங்களுடைய மனசைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி அடக்கிக் கொண்டு இப்போது போகாமல் இருங்கள். அந்த அம்மாள் மயக்கந் தெளிந்து எழுந்து இன்றைய தினம் பகல் எல்லாம் இருந்து, நாம் அனுப்பப் போகும் நம்முடைய வேலைக்காரியின் மூலமாய் உண்மையைச் சிறுகச் சிறுகத் தெரிந்து கொள்ளட்டும். தன்னை நாம் இங்கே என்ன கருத்தோடு கொண்டு வந்திருக்கிறோம் என்பதை அந்த அம்மாள் வேலைக்காரியிடம் அவசியம் கேட்பாள். அப்போது வேலைக்காரி, இந்த ஊர் இன்னதென்பதையும், நீங்கள் இன்னார் என்பதையும் சொல்லாமல், பூடகமாக நீங்கள் ஒரு கோடீசுவரர் என்றும், அழகும், யெளவனப் பருவமும் வாய்ந்தவர் என்றும், நீங்கள் அந்த அம்மாளைப் பட்டணத்தில் கண்டு மோகித்துக் கலியானம் செய்துகொள்ள வேண்டும் என்ற உத்தேசத்தோடு கொண்டு வந்திருப்பதாகவும், நாளைய தினம் காலையில் கலியாணம் நடக்கப் போகிறது என்றும், அந்த அம்மாள் எப்படியும் அதற்கு இணங்கியே தீரவேண்டும் என்றும், இணங்காவிட்டால் நாம் விடப்போகிறதில்லை என்றும் சொல்லி, அந்த அம்மாளுடைய மனப்போக்கு எப்படி இருக்கிற தென்பதைத் தெரிந்து கொண்டு வந்து நம்மிடம் சொல்லட்டும். அதற்கு மேல் ஏற்படும் நிலைமைக்குத் தகுந்தபடி நாம் யோசனை செய்து தந்திரமாக நடந்து கொள்வோம். ஸ்திரீகளின் விஷயத்தில் நாம் நிரம்பவும் ஜாக்கிரதையாகவும் ஸுனாயாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும் அன்றிக் கசக்கி மோரக் கூடாது. கொஞ்சம் பொறுத்து நயமான வழியில் நாம் நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றுவதில், நமக்கு நஷ்டமாவது ஏற்படப்போகிறதில்லை. கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகப் போகிறதில்லை. நம்முடைய வசத்தில் மாட்டிக்கொண்ட பிறகு நாம் இந்த அம்மாளை விடப் போகிறதில்லை. இப்படிப்பட்ட விஷயங்களில்