பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

மாயா விநோதப் பரதேசி

மாயிற்று. பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரியானது. இந்த விபரத்தை எல்லாம் நீ அன்றைய தினமே சொல்லி இருக்கக் கூடாதா? சொல்லி இருந்தால், உன்னை நான் இத்தனை நாள் சிறையில் வைத்திருக்கவே மாட்டேன். நமக்குள் இப்படிப்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டிருக்கவே இடமில்லை. ஆனால், உன் மேலும் குற்றம் சொல்வதற்கில்லை. நான் மனோன்மணியம்மாளின் மேல் ஆசைப்பட்டு அவளை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன் என்று வேலைக்காரி சொல்லும்போது, நீ அவர்களுக்குக் கெடுதல் செய்ய வந்தவள் என்பதைச் சொன்னால், எனக்கு மனோன்மணியம்மாளிடம் உள்ள அபிமானத்தைக் கருதி நான் உன்னைக் கடுமையாக நடத்துவேன் என்று பயந்து நீ உண்மையை மறைப்பதும் சகஜமே. வேலைக்காரி சொன்னதற்கு நீ சரியான மறுமொழி சொல்லாமல் மறைத்ததும் நியாயமே. போனது போகட்டும். அதைப்பற்றி இனி நாம் பேசி மனசைப் புண்படுத்திக் கொள்வதைவிட இருவரும் ஒன்றுகூடி ஆனந்தமாக இருப்போம். கண்ணே! வா இப்படி! இனிமேல் நீ என்னிடம் பயப்படவாவது, லஜ்ஜைப்படவாவது காரணமே இல்லை.

போலி மணப்பெண்:- ஆகா! தெய்வத்தின் கருணையே கருணை! அவருடைய திருவிளையாட்டின் மகிமையை யார் தான் அறியவல்லார்! காருண்ய வள்ளலான ஜெகதீசன் கடைசியில் என்னை அந்த மகான் சட்டைநாத பிள்ளை அவர்களுடைய திருத்தம்பியாருடனா கூட்டிவைத்தார். ஆகா! என் பாக்கியமே பாக்கியம்! எங்கள் முன்னோர்கள் செய்த தவமே தவம்! தங்கள் மனைவியாகிய நான் அவ்விடத்தில் அவர்களிடத்தில் அகப்பட்டு அவமானப்படப் போகிறேன் என்றும், தங்களுக்கு உரியவள் அல்லாத மனோன்மணியை விட்டு, என்னை எடுத்து வரும் பொருட்டு கடவுள் செய்த திருவிளையாடல் எப்படி இருக்கிறது. அதை நினைக்க நினைக்க என் தேகமும் மனமும் பூரித்துப் பரவசம் அடைகின்றன. இனி நான் தங்களுடைய அடிமை. எனக்குக் கடவுள் அபார சக்தி வாய்ந்த மூளையை அளித்திருப்பதாக இனி தாங்கள் எண்ணி அது பற்றி என்னை வெறுக்க வேண்டாம். அந்த மூளையை நான் தங்களுக்கு அனுகூலமாக உபயோகப்படுத்து