பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

235

கொடுத்து, வேலைக்காரர் வண்டியில் உட்கார்ந்து கொள்ளும்படி அவனிடம் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டேன். ஆனால், நமக்குத் தான் முதல் வகுப்பு டிக்கெட்டு கிடைக்கவில்லை. இன்று வரப்போகும் மெயில் வண்டியில் ஜனக்கும்பல் அதிகமாக இருக்கிறதென்றும், முதல் வகுப்பு வண்டியில் இடமே இல்லை ஆகையால், அந்த வகுப்புக்கு டிக்கெட்டுகளே கொடுக்க வேண்டாம் என்றும் முன்னாகத் தந்தி வந்திருப்பதாய் ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார். ஆகையால், இரண்டாவது வகுப்பு டிக்கெட்டுகள் தான் அகப்பட்டன" என்று கூறினார்.

அதைக் கேட்ட ரமாமணியம்மாள் ஒருவித ஆத்திரமும் ஏமாற்றம் அடைந்தவளாய், "என்ன அப்பா இப்படிச் செய்து விட்டீர்களே! நாம் செளக்கியமாக முதல் வகுப்பு வண்டியில் இருக்க வேண்டும் என்று நினைத்தோமே. இரண்டாவது வகுப்பு வண்டி அவ்வளவு செளகரியமாக இருக்குமா? அதில் ஜனக் கும்பல் இருக்குமோ என்னவோ? ஸ்டேஷன் மாஸ்டர் நம்மிடம் ஒரு வேளை பணம் பிடுங்குகிறதற்காகப் பொய் சொல்லு கிறானோ என்னவோ? அவனுக்கு ஏதாவது வாய்மூட்டுப் போட்டுப் பாருங்களேன்' என்று நிரம்பவும் அதிருப்தியோடு கூறினாள்.

அதைக் கேட்ட தந்தை நிரம்பவும் பணிவாகவும் நயமாகவும் பேசத் தொடங்கி, "இல்லை, அம்மா! நான் அவரிடம் முதல் வகுப்பு டிக்கெட்டுக்கேட்பதற்கு முன்பாகவே அவர் தமக்குத் தந்தி வந்த விவரத்தை வேறொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் நம்முடைய மாசிலாமணிப் பிள்ளைக்கு நிரம்பவும் வேண்டியவர், ஆகையால், இன்னார் வந்திருக்கிறார்கள் என்று நான் அவரிடம் சொல்லி, பட்டனத்திற்கு நாலு முதல் வகுப்பு டிக்கெட்டுகள் கேட்டதோடு அவருக்கும் ஒரு ரூபாய் பணம் கொடுத்தேன். அவர் நிரம்பவும் தாபந்திரியப்பட்டார். ஆனால், முதல் வகுப்பில் இடமே இல்லை ஆகையால், அதற்குத் தாம் டிக்கெட்டுக் கொடுத்தாலும், நமக்கு கஷ்டமேயன்றி சுகம் இருக்காதென்று சொன்னார். இரண்டாவது வகுப்பு வண்டியில் ஒரு தனி வண்டியே காலியாக இருக்கிறதாம். அதுவும் முதல்