பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

243

நிலைமையில் இருந்தாள். அவன் பொருட்டு அவள் தனது அபாரமான செல்வத்தை எல்லாம் செலவிடவும் ஆயத்தமாய் இருந்தாள். அவனது வாஞ்சையும் நட்பும் மாறாதிருப்பதற்கு, அவள் கொலை முதலிய மகா கொடிய பஞ்சமா பாதகங்களையும் செய்யத் துணிபவளாய் இருந்தாள். கும்பகோணத்தில், அவள் பல சந்தர்ப்பங்களில் அவனோடு தனிமையில் இருந்து களித்தால் ஆனாலும், மாசிலாமணி வந்துவிடுவானே என்ற பயம் இடையிடையில் தோன்றி வதைத்தது ஆகையால், அத்தகைய துன்பம் கலவாத களங்கமற்ற பூர்த்தியான இன்பம் அனுபவிக்கும் காலம் எப்போது வரும் வரும் என்று அவள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தவள் ஆதலால், அவனோடு தான் சென்னைக்குப் போகக் கிடைத்ததை அவள் நேரிலேயே சுவர்க்க லோகத்திற்குப் போய் அதன் ஒப்பற்ற பேரின்ப சுகத்தை அனுபவிக்கப் போகிறவள் போல மதித்தாள். அவ்வாறு தாங்கள் சென்னையில் அனுபவிக்கப் போகும் சொர்க்க போகத்திற்குப் பந்தக்கால் நாட்டப்படுவது போல அன்றைய இரவு முழுதும் தானும் அவனும் ரயிலில் தனிமையில் ஆனந்தமாய்ப் பிரயாணம் செய்ய நேர்ந்ததை அவள் சாயுஜ்ய பதவிக்கு மேலானதாகவே மதித்து மெய்ம்மறந்து போனாள். பட்டணத்தில் அனுபவிக்கப் போகும் பேரின்ப சுகத்தை எதிர்பார்த்தும், அப்போது வண்டி கிடுகிடென்று சுகமாக ஓடித் தங்களை ஆனந்தமாக அசைத்து லாலி பாடியதை உணர்ந்தும், எவ்வித இடையூறும் இன்றி அந்த இன்பகரமான இடத்தில் தானும் தன் ஆருயிர்க் காதலனும் அந்த இரவு முழுவதும் இருக்கலாம் என்ற எண்ணத்தினாலும், ரமாமணியம்மாள் தன்னை முற்றிலும் மறந்து குதூகலமும் ஆனந்தமுமே வடிவெடுத்து வந்தனவோ என்னலாம் படி மாறி பக்கிரியா பிள்ளையிடத்தில் குழந்தை போலக் கொஞ்சி விளையாடத் தொடங்கி,

“ஓங்கு மலைக்காட்டின் உள்ளிருந்து தூங்காமல்
தூங்கு சப்ர மஞ்சமிசைத் தூங்கு நவரசத்தேன்
மொய்த்த மலைக்காட்டு முள்ளு நவரசத்தேன்
மெத்தையின் மேலேறி விளையாடும் தோகைமயில்"

என்ற லட்சணங்கள் வாய்ந்தவளாய்ப் பக்கிரியா பிள்ளையை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி அபரிமிதமான சுகத்தினால்