பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

247

அம்மாள் இரண்டாவது வகுப்பு டிக்கெட்டு வாங்கிக் கொண்டு இடம் இல்லாமையால் அவஸ்தைப்படுகிறார்கள். இங்கே இடம் இருக்கையில், அவர்களை மூன்றாவது வகுப்பு வண்டியில் ஏற்றுவது நியாயமாகுமா? இங்கே ஏறப்போகிறவர்கள் ஒரே ஒரு பெண் பிள்ளை ஆகையால் உங்களுக்கு எவ்வித இடைஞ்சலும் ஏற்படாது. ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமான ஒவ்வொரு சோபா இருக்கையில், ஒருவரால் மற்றவருக்கு என்ன அசௌகரியம் ஏற்படப் போகிறது. வழியை விட்டு அப்பால் நகர்ந்து கொள்ளும். நேரமாய்விட்டது. வண்டியை விட வேண்டும்" என்று அழுத்தமாகவும் அதிகார தோரணையாகவும் கூற, அதற்கு மேல் எவ்வித ஆட்சேபனையும் சொல்ல மாட்டாமல் கிழவர் அப்பால் போய்விட்டார். வண்டிக்குள் அன்னிய மனிதர் யாரோ வரப் போகிறார் என்பதை உணர்ந்தவுடனே நால்வரும் தனித்தனியே பிரிந்து நான்கு சோபாக்களில் போய் சௌகரியமாய் உட்கார்ந்து கொண்டனர். ரமாமணியின் பெற்றோர் அது வரையில் உட்கார்ந்திருந்ததும், கதவிற்கு அருகில் இருந்ததுமான சோபா காலி செய்து விடப்பட்டது. அடுத்த நிமிஷம் கார்ட் கதவைத் திறந்துவிட்டு, "எறுங்கள் அம்மா! அதோ முதலில் இருக்கும் சோபா காலியாக இருக்கிறது. அதில் போய் உட்கார்ந்து கொள்ளுங்கள். இந்த வண்டியில் இன்னம் ஒருவர் இருப்பதற்கு இடம் இருக்கிறது. அடுத்த ஸ்டேஷன்களில் இன்னம் யாராவது ஏறவந்தால், ஒருத்தருக்குத் தான் இடம் இருக்கிறது என்று சொல்லுங்கள். ஒருவருக்கு மேல் அதிக மனிதரை விட வேண்டாம்" என்று நிரம்பவும் மரியாதையாகக் கூற, அடுத்த நிமிஷம் ஓர் அம்மாள் ஏறி வண்டிக்குள் வந்து, முதலில் இருந்த சோபாவின் மேல் உட்கார்ந்து கொண்டாள். உடனே கார்டு கதவை மூடிக்கொண்டு அப்பால் போய்விட்டார். வண்டியும் உடனே புறப்பட்டு விட்டது.

அவ்வாறு புதிதாக வந்து உட்கார்ந்து கொண்ட அம்மாள் சுமார் - ஐம்பத்தைந்து வயதடைந்தவள் போலக் காணப்பட்டாள். அவளது தலைமயிர் முற்றிலும் நரைத்து வெண்சாமரம் போல் வெளுத்து, பெருத்த புதர் போல அடர்ந்து பொதிர்ந்து காணப்