பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

257


ர. தாய்:- போகட்டும், அவ்வளவாவது உங்களுக்கென்று வைத்துக் கொண்டீர்களே, அது ஒருவிதமான ஆறுதல் தான். அதிருக்கட்டும்; நீங்கள் தேச சஞ்சாரம் புறப்பட்டு எவ்வளவு காலமாகிறது?

விதவையம்மாள்:- மூன்று மாச காலமாகிறது.

ர. தாய்:- அடேயப்பா மூன்று மாச காலமாக இப்படி ஊரூராய்ப் போய்க் கொண்டிருந்தால், உங்களுடைய உடம்பு என்னத்திற் காகும்? இன்னும் எவ்வளவு காலம் வரையில் இப்படி நீங்கள் தேச சஞ்சாரஞ் செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள்?

விதவையம்மாள்:- ஊரூராய்ப் போவதில் பலவித நன்மை களும், முக்கியமாக ஆத்ம திருப்தியும் உண்டாகின்றன ஆனாலும், இதுவரையில் சொகுசாகவும் மெலுக்காகவும் இருந்து, எவ்வித செளகரியமும் இல்லாமல் அலைந்து திரிவது தேகத்திற்குப் பிரயாசையாகத் தான் இருக்கிறது. ஒவ்வொரு விதமான அரிசி, ஒவ்வொரு விதமான தண்ணீர், ஒவ்வொரு விதமான படுக்கை, ஒரு நாள் வெயில், ஒரு நாள் மழை, ஒரு நாள் வெப்பம், ஒரு நாள் குளிர், இப்படிப்பட்ட பலவகையான மாறுபாடுகளை மாறி மாறி உடம்புக்குக் கொடுத்துக் கொண்டே இருப்பதால், உடம்பு பலவீனப்பட்டுப் போய்விட்டது. இனி நான் அதிகமாய் அலைந்து கொண்டிருந்தால், வியாதியாய் விழுந்துவிடுவேன் போலத் தோன்றுகிறது. ஆகையால், இனி அதிகமாக தேச சஞ்சாரஞ் செய்ய எனக்கு உத்தேசமில்லை. நான் பார்க்க எண்ணிய இடங்கள் எல்லாம் அநேகமாய்த் தீர்ந்து போய்விட்டன. நான் முன்னே சொன்னபடி பட்டணம், மயிலை, திருவொற்றியூர், திருத்தணிகை, திருவண்ணாமலை இந்த இடங்கள் மாத்திரம் பாக்கி இருக்கின்றன. அவைகளைப் பார்த்துக் கொண்டு திரும்பி வந்து ஓரிடத்தில் நிலையாய்த் தங்க உத்தேசிக்கிறேன். ர. தாய்:- அது தான் நல்ல காரியம். அப்படியே செய்யுங்கள். “நம்முடைய எஜமானர் போய்விட்டார். சொத்து சுதந்திரங்கள் போய்விட்டன. நமக்கு உற்றார் உறவினர் இல்லை. இந்த உலகத்தில் இனி என்ன பற்று இருக்கிறது” என்று நினைத்துமா.வி.ப.II-17