பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

மாயா விநோதப் பரதேசி

பட்டிருக்கவாவது மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அவனைப் பாம்பு கடித்துவிட்டது என்று மாத்திரம் ஜனங்கள் எல்லோரும் சொல்லிக் கொள்ளுகிறார்களே அன்றி, பாம்பு எங்கே இருந்து அவனைக் கடித்ததென்ற விவரமே எவருக்கும் தெரியவில்லை. நாம் அனுப்பிய கடிதம், பெட்டி முதலியவற்றைப் பற்றிய பிரஸ்தாபமும் உண்டாகவே இல்லை. யார் யாரோ வைத்தியர்களும் மந்திரவாதிகளும் வந்து குட்டிக் கரணம் போட்டுப் பார்த்தார்கள். எதுவும் பலிக்கவில்லை. கடைசியில் வெள்ளிக்கிழமை இரவில் அந்த நாய் வாயைப் பிளந்து விட்டது. பொழுது விடிகிற வரையில் கூட, அவனுடைய பிணத்தை வைக்காமல், வேலாயுதம் பிள்ளை வீட்டாரும் போலீசாரும் சேர்ந்து இரவோடு இரவாகக் கொண்டு போய்க் கொளுத்தி விட்டார்களாம். நேற்று அவனுடைய பெண்ஜாதி அவனுடைய சாம்பலைக் கரைத்துவிட்டு உடனே புறப்பட்டு குத்தாலம் போய்ச் சேர்ந்துவிட்டாளாம். நம்மை எல்லாம் பிடித்த பெரிய சனியன் தொலைந்தது. இனி நமக்கு எவரைப் பற்றியும் பயமே இல்லை. இனி நாம் ஏகசக்கராதிபதிகள்தான். அண்ணனைக் கொண்டு வந்ததைப் பற்றியும் மனோன்மணியைக் கொண்டு வந்ததைப் பற்றியும் கூட, எனக்கு அவ்வளவு அதிக சந்தோஷம் உண்டாகவில்லை. இந்தப் பண்டாரம் தொலைந்து போன சங்கதிதான் எனக்கு இந்த உலகத்தையே பட்டங்கட்டி வைத்தால் அது எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட அபாரமான பேரானந்தத்தை உண்டாக்கி விட்டது.

இடும்பன் சேர்வைகாரன்:- சரி;ஒழிந்தானா சாமியார் சந்தோஷமாயிற்று. அந்த யோசனையை நான் உங்களிடம் சொன்ன போது நீங்கள் என்னைப் பரிகாசம் செய்தீர்கள். அப்போது நான் உங்கள் மனம் திருப்தி அடையும்படி மாத்திரம் எல்லா விவரங்களையும் சொன்னேனே அன்றி என் மனசில் மாத்திரம் ஒருவித சந்தேகம் இருந்தே வந்தது. நாம் இவ்வளவு பாடுபட்டு என்னென்னவோ பைத்தியகாரத் தந்திரங்களை எல்லாம் செய்கிறோமே, அவன் மகா மேதாவி ஆயிற்றே; நம்முடைய எண்ணம் எங்கே பலிக்கப் போகிறது என்று என் மனம்