பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

261

ர. தாய்:- ஓகோ! அப்படியா! நீங்கள் நிரம்பவும் தயாளமான எண்ணத்தைத் தான் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள், இப்படிப் பட்ட காருண்ய வள்ளல் இந்த உலகத்தில் இந்தக் காலத்தில் இருப்பது அரிது. நீங்கள் மகா புண்ணியவதி என்பதைப் பற்றி கொஞ்சமும் சந்தேகமே இல்லை. உங்களுடைய தரிசனமும் பழக்கமும் எங்களுக்கு ஏற்பட்டது அதிர்ஷ்டவசம் என்றே நினைக்கிறேன். எங்களுடைய ஊரும் கும்பகோணம் தான். . நீங்கள் எங்களுடைய ஊருக்கே வருவதைக் கேட்க, எனக்கு அளவற்ற சந்தோஷம் உண்டாகிறது. உங்களை நாங்கள் அடிக்கடி அந்த ஊரில் பார்க்கும்படியான பாக்கியம் கிடைக்கும் அல்லவா.

விதவையம்மாள்:- (மிகுந்த வியப்போடு) ஓகோ! அப்படியா சங்கதி? உங்கள் ஊரும் கும்பகோணமா! சரி, சரி, நான் இனி கும்ப கோணத்திற்குப் போய்ப் புதிய மனுஷ்யாளைத் தேடி அலையா மல் இருக்கும் பொருட்டு கடவுள் என்னை இந்த வண்டிக்கு இழுத்து வந்து உங்களோடு பரிச்சயம் செய்து வைக்கிறார் போல் இருக்கிறது. அவருடைய திருவிளையாடல்களின் தந்திரங்களை யார் அறிவார்! எங்கெங்கோ இருக்கும் மனிதர்களை எப்படியோ கொண்டு வந்து சேர்த்து என்னென்னவேர் காரியங்களை எல்லாம் கூட்டி வைத்து விடுகிறார். ஆகா! கடவுளின் மகிமையே மகிமை! அப்படியா! நீங்கள் இருப்பது கும்பகோணமா! நல்லதாயிற்று. நீங்கள் கும்பகோணத்தில் எந்தத் தெருவில் இப்வர்கள்?

ர. தாய்:- நாங்கள் பெரிய தெருவில் இருப்பவர்கள்.

விதவையம்மாள்:- ஓகோ! பெரிய தெருவா! நான் அந்த ஊருக்கு வந்த போது அந்தத் தெருவைப் பார்த்திருக்கிறேன். அது நல்ல அழகான தெரு. அந்தத் தெருவில் உங்களுடையது சொந்த வீடு தானே? உங்களுக்கு அங்கே என்ன தொழிலோ?

ர. தாய்:- அது எங்களுடைய சொந்த வீடுதான். எங்களுக்குப் போதுமான சொத்தைக் கடவுள் கொடுத்திருக்கிறார். ஆகையால், நாங்கள் அதை வைத்து காலக்ஷேபம் செய்து கொண்டு சௌக்கியமாக அந்த ஊரில் இருக்கிறோம் என்றாள்.