பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

269

நாதியற்று அலைகிறேனே என்று கடவுளே தமது அபாரமான திருவருட் கருணையால் உங்களுடைய வழியில் என்னைக் கொண்டு வந்து விட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தாய்! உன்னுடைய இஷ்டம் போல நான் உங்கள் வீட்டு இரண்டாங்கட்டில் ஜாகை வைத்துக் கொள்ளுகிறேன். மற்றபடி, நாம் ஒருவர்மேல் ஒருவர் கொண்டுள்ள பிரியத்தைச் செய்கை யிலேயே காட்டிக் கொள்வோம். அதிருக்கட்டும். நாம் இவ்வளவு நெருங்கிய பந்துக்கள் ஆகிவிட்டோமே. இன்னும் நான் உங்களுடைய பெயரைத் தெரிந்து கொள்ளவில்லையே" என்றாள்.

ரமாமணியம்மாள், "எனக்கு ஆதியில் வைத்த பெயர் திரிலோக சுந்தரி என்பது. இவர்கள் என்னை செல்லமாக ரமாமணி என்று கூப்பிட்டு வருகிறார்கள். என் தாயாருடைய பெயர் விசாலாகூஜியம்மாள்" என்றாள்.

அதைக் கேட்ட நீலலோசனியம்மாள், "ஆகா! அப்படியா! எப்படியாவது நாம் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி அழைப்பது போல சுவாமியினுடைய பெயர்களைச் சொல்லி அவரை அழைப்போம். அம்மா குழந்தாய்! நீ நல்ல பாக்கியசாலி, உன் முகத்தில் லகஷ்மி விலாசம் கொஞ்சுகிறது. நீ ஆயிரங்காலம் அமோகமாக வாழ்வாய்" என்று கூறி மனப்பூர்வமாக ஆசீர்வதித்தாள்.

உடனே ரமாமணியம்மாள், "எல்லாம் உங்களைப் போன்ற புண்ணியாத்மாக்களுடைய ஆசிர்வாத பலன்தான். அது இருக்கட்டும். நீங்கள் எப்போது போஜனம் செய்தீர்களோ என்னவோ தெரியவில்லை. நாங்கள் கொஞ்சம் பகஷண பலகாரங்கள் கொண்டு வந்திருக்கிறோம். அவைகளில் கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா?" என்று அன்பொழுகக் கூற, நீலலோசனியம்மாள், "வேண்டாம், தங்கமே! நான் இராத்திரி 9-மணிக்குத்தான் சிதம்பரத்தில் பலகாரம் சாப்பிட்டேன். இரண்டு மூன்று தினங்களாய் எனக்கு உடம்பு சரியாக இல்லை. வயிறு மந்தமாக இருக்கிறது. இந்த அகாலவேளையில், நான் எதையாவது வயிற்றில் செலுத்தினால், பிறகு அது பெருத்த உடத்திரவமாக முடியும். என்னுடைய சாப்பாட்டுக்கென்ன தாயே! இனி நான் உன் மனுஷியாய் விட்டேன். நீ எனக்கு எவ்வளவோ சாப்பாடு