பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

மாயா விநோதப் பரதேசி

யும் மரியாதையையும் எண்ண, அது உண்மையான வரலாறாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு, அப்போதே நேரில் சுவர்க்க லோகத்தில் புகுந்தவன் போல விவரிக்க இயலாத பேராநந்த நிலைமையை அடைந்து மெளனத்தில் ஆழ்ந்து போனான். ரமாமணியின் சிநேகத்தால் மேன்மேலும் தனக்கு வந்து சேரும் குபேர சம்பத்தையும் போக பாக்கியங்களையும் எண்ண எண்ண, அவன் ஒரே இன்பமயமாய் நிறைந்து உட்கார்ந்து போனான்.

உடனே நீலலோசனியம்மாள், “தம்பி உங்கள் இருவருடைய இனிமையான குணத்தையும் காணக் காண, எப்போது நாம் திரும்பி கும்பகோணம் போவோம், எப்போது நான் என் பணத்தை வருவித்து உங்களிடம் கொடுப்பேன் என்று என் மனம் துடிக்கிறது. நான் முக்கியமாக மயிலாப்பூரையும் இந்த ஊரையும் பார்க்க வேண்டும் என்று வந்தேன். பட்டணத்தில் இன்னம் நான் பார்க்க வேண்டிய கோவில்கள் இரண்டொன்று இருக்கின்றன. அவைகளை எல்லாம் நான் நாளைய தினம் பார்த்துவிடுவேன். அதோடு என் வேலை முடிந்து போகும். நீங்கள் கோரி வந்திருக்கும் காரியமும் நாளைக்கு முடிந்து போகும் என்றும், மறுநாள் மாலையில் நாம் எல்லோரும் ஊருக்குப் போகலாம் என்றும் விசாலாகூஜியம்மாள் சொன்னார்கள். நாளைய தினமாகிய ஒரு பொழுது கழிய வேண்டும். நீங்கள் கோரி வந்திருக்கும் காரியம் நாளைக்கு முடியாமல் ஒருவேளை தாமதப்படுமோ என்னவோ!” என்றாள்.

உடனே பக்கிரியா பிள்ளை, “இல்லை இல்லை; நாங்கள் கருதி வந்திருக்கும் காரியம் நாளைய தினம் ராத்திரி அவசியம் முடிந்து போகும். மறுநாள் நாம் எப்படியும் புறப்பட்டுப் போய் விடலாம்” என்று அழுத்தமாகக் கூறினான்.

நீலலோசனியம்மாள் அதற்கு மேல் கால் நாழிகை வரையில் மெளனமாக இருந்து கண்களை மூடி ஜெபம் செய்த பின் விழித்துக் கொண்டு, “ஏன் தம்பி! உங்களோடு வந்திருக்கிறாரே ஒரு சேர்வைகாரர்; அவர் யார் என்பது தெரியவில்லையே! நீங்கள் அவரிடம் காட்டும் மரியாதையைப் பார்த்தால், அவர் உங்