பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

27

இடும்பன் சேர்வைகாரன்: ஆம். வாஸ்தவம் தான். அதிருக்கட்டும். நாம் இந்தப் பெண்ணை இங்கே கொண்டு வந்து மூன்றாவது உப்பரிகையில் வைத்திருக்கிறோமே. பட்டாபிராம பிள்ளையோ, அல்லது, வேலாயுதம் பிள்ளை விட்டாரோ, இந்தப் பெண்ணை நாம் தான் கொண்டு வந்திருப்போம் என்று சந்தேகப்பட்டுப் போலீசாரிடம் தெரிவித்தால், போலீசார் வந்து வீட்டை சோதனைப் போட்டுப் பார்த்தாலும் பார்க்கலாமே. அந்த விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டாமா?

மாசிலாமணி:- அதைப்பற்றி எனக்குக் கொஞ்சம்கூட பயமில்லை. போலீசார் வரும் பட்சத்தில் பெண்ணை நான் ஒரு நொடியில் மறைத்து விடுவேன். ஈசுவரன் வந்தால்கூட பெண் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாது. அதுவுமல்லாமல், அவர்கள் நம்மேல் சந்தேகப்படவே நியாயமில்லை. பட்டனத்தில் பெண் காணாமல் போனால், கும்பகோணத்தில் உள்ள நாம்தான் அவளை அபகரித்துக் கொண்டு போயிருப்போம் என்ற சந்தேகம் ஏற்படும் எனத் தோன்றவில்லை.

இடும்பன் சேர்வைகாரன்: சரி; அதிருக்கட்டும். நீங்கள் உங்களுடைய தமயனாரிடம் போய் இந்த விவரங்களை எல்லாம் சொன்னீர்களே. அப்போது இந்தப் பெண்ணை நாம் கொண்டு வரப் போகிறோம் என்ற விஷயத்தையும் சொன்னீர்களா? சாமியார் இறந்து போன விஷயத்தில் அவர்கள் என்ன சொன்னார்கள்.

மாசிலாமணி :- நான் எல்லா சந்தேகங்களையும் அண்ணனிடம் சொன்னேன். திகம்பரசாமியார் இறந்து போய் விட்டான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அவருக்குண்டான ஆனந்தத்துக்கு அளவே சொல்ல முடியாது. தாம் பிறந்த பிறகு நேற்றுதான் உண்மையான பேரின்பம் எப்படி இருக்கும் என்பதை அவர் உணர்ந்ததாகச் சொன்னதன்றி, எவராலும் வெல்ல முடியாத மகா தந்திரசாலியான சாமியாரை நீர் வெகு சுலபத்தில் கொன்று விட்டதைப் பற்றி அவர் உம்மை ஸ்தோத்திரம் செய்தது இவ்வளவு அவ்வளவல்ல; உமக்குப் பதினாயிரம் ரூபாயும், உம்முடைய ஆள்களுக்குத் தலைக்கு ஐந்நூறு ஐந்நூறு ரூபாயும்