பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

295

விடிந்தவுடன் போலீசார் சந்தேகப்பட்ட மனிதர்களை எல்லாம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய், எக்ஸ்ரே என்ற யந்திரத்தை வைத்து வயிற்றின் உள் பாகத்தை போட்டோ பிடித்தார்களாம். மோதிரம் நம்முடைய இடும்பன் சேர்வைகாரனுடைய வயிற்றில் இருக்கிறதாம்; அந்தப் படத்தை நானும் பார்த்தேன். மோதிரம் வயிற்றில் இருப்பது நன்றாகத் தெரிகிறது. போலீசார் அவனை மாத்திரம் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, மற்றவரை விட்டுவிட்டார்கள். நம்முடைய போயியைக் காய்கறிக் கடைக்குப் போய் விட்டு வரும்படி அனுப்பி இருக்கிறேன். மற்ற பிரயாணிகள் தாம் போக வேண்டிய இடங்களுக்குப் போய்விட்டார்கள். இடும்பன் சேர்வைகாரனை இரண்டு நாளில் தண்டித்து விடுவார்கள். குறைந்தது ஆறுமாத தண்டனையாவது கிடைக்குமாம். போலீசார் எவ்வளவு தூரம் அடித்து வற்புறுத்திக் கேட்டாலும், சேர்வைகாரன் தான் திருடவில்லை என்றும், மோதிரம் தன் வயிற்றில் இருக்காதென்றும் சொல்லுகிறான். இந்த அம்மாளை சப் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்ய வேண்டுமாம். வரச் சொன்னார்” என்றார்.

அதைக் கேட்ட மற்றவர் பெருத்த கலக்கமும், கவலையும் விசனமும் அடைந்து என்ன சொல்வதென்பதை அறியாமல் மெளனமாக இருந்தனர். தான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு நீலலோசனியம்மாள் உடனே அவ்விடத்தில் இருந்து புறப்பட்டுப் போய்விட்டாள். ரமாமணியம்மாள் முதலியோர் பெருத்த மனக் கலக்கமும், மலைப்பும் அடைந்து, தாம் போஜனம் செய்ய வேண்டும் என்பதையும் மறந்து அப்படியே உட்கார்ந்து போயினர். தங்களோடு வந்த மனிதரை ஏவி தாங்களே அந்தத் திருட்டை நடத்தி இருக்கிறோம் என்று நீலலோசனியம்மாள் நினைத்து தம்மைப் பற்றி வித்தியாசமான அபிப்பிராயம் கொண்டு விடப் போகிறாளே என்பதே அவர்களது முக்கியமான கவலையாக இருந்தது. அதுவுமன்றி, அன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆதலால், நிச்சயதார்த்தம் கோமளேசுவரன் பேட்டையில் நடக்கிறதா, அல்லது, புரசைப் பாக்கத்தில் நடக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு ரமாமணியம்மாள் கல்யாணக் கும்பலில் போய்ச் சேர்ந்து கொள்ள வேண்டும். அதுவுமன்றி, இடும்பன் சேர்வைகாரனுடைய ஆள்களை அவன்