பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

மாயா விநோதப் பரதேசி

இரவில் நேராக கோமளேசுவரன் பேட்டைக்கு வரும்படி ஏற்பாடு செய்திருந்தான் ஆதலால், அவர்கள் வந்தவுடன், அவர்களைத் தக்கபடி நடத்தி, வேலாயுதம் பிள்ளையின் வீட்டார் இருக்கும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு போய்க் காரியத்தை நடத்த வேண்டும். பகைவரின் அடையாளத்தை ரமாமணியம்மாள் இடும்பன் சேர்வைகாரனுக்குக் காட்ட வேண்டும். அவன் தன்னுடைய ஆள்களை ஏவி உடனுக்குடன் ஒவ்வொருவரது வேலையையும் முடிக்க வேண்டும். ஆகவே, இடும்பன் சேர்வைகாரன் இல்லாமல் போனால், அவர்கள் கோரி வந்த காரியம் நடவாது. அதுவுமன்றி, இடும்பன் சேர்வைகாரனுடைய ஆள்கள் இன்னின்னார் என்பது கூட, ரமாமணியம்மாள் முதலியோருக்குத் தெரியாது. ஆகவே, அந்தப் பெருத்த இக்கட்டில் தாம் எப்படி நடந்து கொள்வது என்பதை அறியாதவராய், ரமாமணியம்மாள் முதலியோர் குழம்பித் தவித்துத் தத்தளித்தனர். நீலலோசனியம்மாள் பெருந்தன்மை உடையவள் ஆதலால், அவள் இடும்பன் சேர்வைகாரனுக்குத் தண்டனை செய்து வைக்க விரும்பமாட்டாள் என்றும், அநேகமாய் அவன் விடுதலையடைந்துவிடலாம் என்றும், விடுதலை அடையாவிடில், ரமாமணியின் தகப்பனார் அவனை ஜாமீனில் விடுவித்து அழ்ைத்துக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் முடிவு கட்டினர். ஆகவே, ரமாமணியின் தகப்பனார் தமது போஜனத்தை முடித்துக் கொண்டு, தம்மிடத்தில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் கையில் எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ச்சேர்ந்தார்.

பிறகு ரமாமணியம்மாளும் மற்றவரும் தமது போஜனத்தை முடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து என்ன செய்தி வருமோ என்று மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர். ரமாமணியின் தந்தை மாத்திரம் மாலை நான்கு மணிக்கு விசனத்தினால் வாடிய முகத்தோடு வந்து சேர்ந்து, “அம்மா! ரமாமணி! நீலலோசனியம்மாள் இங்கே என்ன நடந்ததோ அதை அப்படியே அங்கே சொன்னாள். அதிலிருந்தும், இடும்பன் சேர்வை காரனுடைய வயிற்றில் மோதிரம் இருப்பதிலிருந்தும், அவனே