பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

301

களே அன்றி விரும்பார்கள் என்றும், தனக்குக் கணவனாக வரிக்கப்பட்டுள்ள கந்தசாமியும் அதே மனப்போக்குடையவன் என்றும், தான் அவனை மணந்து கொண்ட பிறகு தனது பி.ஏ. பட்டம் எப்படி உபயோகப்படப் போகிறதென்றும் கொடி முல்லையம்மாள் கூறிய சொற்கள் கூர்மையான ஈட்டிகள் போல மனோன்மணியம்மாளது மனத்தில் தைத்து பலவித சந்தேகங்களையும் ஓயாத கவலையையும் மனவேதனையையும் உண்டாக்கிக் கொண்டே இருந்தன. மன்னார்குடியாருக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்ற கருத்தோடு அவர்களது பகைவரைச் சேர்ந்த மனிதர்கள் வந்து தன் மனதைக் கலைக்க முயன்றார்கள் என்று அவள் நிச்சயமாக எண்ணினாள் ஆனாலும், அவர்களது பழக்க வழக்கங்களைப்பற்றியும், கர்னாடகமான மனப்போக்கைப் பற்றியும் கொடிமுல்லையம்மாள் கூறிய விவரங்கள் அநேகமாய் உண்மையாக இருக்க வேண்டும் என்ற நினைவே மும்முரமாய் அவளது மனத்தில் எழுந்து எழுந்து வதைக்கத் தொடங்கியது. மனோன்மணியம்மாள் இரண்டு வருஷ காலத்திற்கு முன் மன்னார்குடியில் இருந்த காலத்தில், வேலாயுதம் பிள்ளை விட்டார் எவரையும் மனோன்மணியம்மாள் பார்த்தவளும் அன்று. அவர்களைப் பற்றி எவ்வித தகவலும் தெரிந்து கொண்டவளும் அன்று; ஆனால், அவளது தந்தையான பட்டாபிராம பிள்ளைதமது புதல்விக்கு வயது வந்து விட்டதைக் கருதி, அவளைத் தக்க ஓர் இடத்தில் வாழ்க்கைப் படுத்த வேண்டும் என்ற எண்ணமும் கவலையும் கொண்டு, தமது பழைய நண்பரும் பரோபகாரியுமான திகம்பரசாமியாருக்கு அவ்விஷயத்தைப் பற்றி எழுதி, அவருக்குத் தெரிந்த நல்ல இடம் ஏதாவது இருந்தால் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். திகம்பரசாமியாரும் பெண்ணைப் பார்த்ததில்லை ஆனாலும், அவளது குணாதிசயங்களை அறியவில்லை ஆனாலும், பட்டாபிராமபிள்ளையின் குலத்தின் உயர்வையும், குணத்தின் மேம்பாட்டையும், மேலான அந்தஸ்தையும், அளவற்ற ஐசுவரியத்தையும் கருதியதன்றி, அவரது புதல்வியான மனோன்மணியம்மாள் நற்குண நல்லொழுக்கம் உடையவளாகவே இருப்பாள் என்று எண்ணி, அந்த