பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

29

மறக்க முடியுமா? ஒருநாளும் இல்லை. எல்லோருக்கும் தவறாமல், நாளைய தினம் கலியாணப் பந்தலில் அவரவர்களுக்குத் தக்கபடி மரியாதை நடத்திவிடுகிறேன். அதைப்பற்றி நீர் சிந்தனையே செய்ய வேண்டாம். நாங்கள் எங்களுடைய எதிரியான திகம்பர சாமியாருக்குக் கூட மரியாதை நடத்தப் போகிறோம். ஏனென்றால், அவரும் எங்களுக்கு ஓர் உதவி செய்திருக்கிறார். அவர் இந்த உலகத்தில் இருப்பதைவிட இறந்து போவது மற்ற எல்லா வற்றையும்விட அவர் எங்களுக்குச் செய்யக்கூடிய பெருத்த உதவி ஆகையால், அதற்காக அவர் விஷயத்திலும் சில மரியாதைகள் நடத்தும்படி அண்ணன் சொல்லி இருக்கிறார்.

இடும்பன் சேர்வைகாரன்:- (ஆச்சரியமடைந்து) சாமியாருக்கு மரியாதைகளா? என்ன மரியாதைகள்?

மாசிலாமணி:- அவனுடைய கருமாதி வரப் போகிறதல்லவா? அன்றைய தினம் அவன் பொருட்டு இருபத்தையாயிரம் ரூபாய் செலவு செய்யும்படி அண்ணன் என்னிடம் சொல்லி இருக்கிறார்.

இடும்பன் சேர்வைகாரன்:- நீங்கள் சொல்வது எனக்கு நன்றாக விளங்கவில்லை.

மாசிலாமணி:- அவனுடைய கருமாதி தினத்தன்று இந்த ஊர், மன்னார்குடி ஆகிய இரண்டு இடங்களிலும் உள்ள கோவில்களில் எல்லாம் சுவாமிக்கு அபிஷேகம், அர்ச்சனை, பலவகைப்பட்ட நிவேதனம் முதலியவைகளை நடத்தி வைக்க வேண்டும். அதோடு இந்த இரண்டு ஊர்களிலும் உள்ள ஏழைகள், நொண்டிகள், முடவர்கள், குருடர்கள், வயோதிகர்கள் முதலிய சகலமான ஜனங்களுக்கும் சாப்பாடு போட்டு வஸ்திரதானம் செய்ய வேண்டும். அதற்கு இருபத்தைந்து ஆயிரத்துக்கு அதிகமாகவே பணச்செலவு பிடிக்கும்.

இடும்பன் சேர்வைகாரன்:- (சந்தோஷத்தோடு நகைத்து) பேஷ். நல்ல ஏற்பாடு! முக்கியமாக கடவுளின் அநுக்கிரகத்தினாலேயே நமக்கு இப்படிப்பட்ட அனுகூலங்கள் ஏற்பட்டிருக்கின்றன ஆகையால் நீங்கள் சொன்ன பூஜை தான தர்மங்களை எல்லாம்