பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

மாயா விநோதப் பரதேசி

பார்ப்பானாகில், அவரது முகத்திலிருந்து ஜ்வலித்துக் கொண்டிருந்த சாந்த குணமாகிய காந்த சக்தி உடனே அவனது மனத்தைக் கவர்ந்துவிடும். அவன் அந்த ஒரு கூடிண நேரமாவது சாத்வீக குணத்திற்கு அடிமையாய்ப் படிந்து தனது துஷ்ட குணத்தை அவரிடம் காட்டாமல் மறைத்து மிகுந்த பயபக்தி மரியாதையோடு அவரிடம் பேசிவிட்டு அப்பால் போவான். அதுவுமன்றி, அவரது சொல்லை மறுத்து அதற்கு மாறான அபிப்பிராயத்தைச் சொல்வதற்கு எவரது மனதும் துணியாது. அவரது உடம்பிலிருந்து ஏதேனும் வஸ்து தவறிக் கீழே விழுந்து விடுமானால், அவருக்குப் பக்கத்தில் மகாராஜனே உட்கார்ந்திருந்தாலும், அவன் சரேலென்று பாய்ந்து அந்த வஸ்துவை எடுத்து நிரம்பவும் மரியாதையோடும் பிரியத்தோடும் அவரிடம் கொடுப்பான். அத்தகைய உத்கிருஷ்டமான நற்குண சக்தி அவரிடத்தில் பூர்த்தியாகக் குடிகொண்டிருந்தது. அந்த உத்தம புருஷர் முதலில் வண்டியை விட்டுக் கீழே இறங்கினார். பரமசிவனுக்கு உகந்த பார்வதிதேவி போலவே காணப்பட்ட அவரது மனைவி அவருக்குப் பின்னால் இறங்கினாள். அந்த அம்மாளுக்குப் பிறகு தத்ரூபம் மன்மதனும் ரதிதேவியும் போலத் தோன்றிய கண்ணப்பாவும், வடிவாம்பாளும் இறங்கினார்கள். அவர்களுக்குப் பின்னால் வேலைக்காரனும், வேலைக்காரியும் அவர்களது பெட்டி முதலிய சாமான்களையும் இரண்டு வெள்ளிக் கூஜாக்களையும் எடுத்துக் கொண்டு இறங்கினார்கள். அந்தச் சிறிய கும்பலின் தலைமை வகித்த வேலாயுதம் பிள்ளையினது வடிவம், பணிவு, சாந்தம், அடக்க வொடுக்கம் முதலிய குணங்களின் அவதாரம் போலக் காணப்பட்டு, உலகத்தில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட சகலமான ஆன்மாக்களுக்கும் தான் கீழ்ப்பட்ட தொண்டன் என்று பறைசாற்றுவது போலத் தோன்றினாலும், அவரைத் தொடர்ந்து வந்த மற்றவர்கள் அவரை ஒரு சக்கரவர்த்தி, அல்லது, மண்டலேசுவரன், அல்லது, அவர்களிலும் மேம்பட்ட கடவுள் என்று நினைத்து மனமார்ந்த வாத்சல்யத்தோடு கலந்த பயபக்தி விசுவாசத்தை அவரிடம் தோற்றுவிப்பவராய்க் காணப்பட்டனர். பெரியவர்கள் தம்மினும் சிறியோரிடம் மட்டற்ற வாஞ்சையும் மதிப்பும் காட்டியதற்கிணங்க, சிறியோர் மூத்தோரை தெய்வம்