பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

313

மான இதர ஜனங்களோடு அடைபட்டு வந்திருக்கிறார்கள் ஆதலால், அவர்கள் பரமலோபிக் குணமுடையவர்களாக இருக்க வேண்டும் என்று மனோன்மணியம்மாள் தீர்மானித்துக் கொண்டாள். வேலாயுதம் பிள்ளையும், கண்ணப்பாவும் தனது தந்தையைப் போல நிஜார், சட்டை, தலைப்பாகை, பூட்ஸ் முதலிய அலங்காரங்களோடு வந்திருப்பார்கள் என்று அவள் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் ஏமாற்றமாக, அவர்கள் பட்டவர்த்தனமாகத் தமது உடம்மைத் திறந்து கொண்டு கோவிலில் சுவாமி தரிசனத்திற்குப் போவோர் போல வைதிகப் பழக்கமாய் வந்திருந்த காட்சி அவளுக்குப் பரம விகாரக் காட்சியாகத் தோன்றியது. பெண்பாலார் டாம்பிகமான பட்டாடைகளையும் ஆபரணங்களையும் அணிந்திருந்தும், அவர்கள் ஆண்பாலாரைக் கண்டு காட்டு மாடுகள் மருளுவது போல மருண்டு ஒருவர் பின் ஒருவர் சென்று ஆடுகள் போல மறைந்து கொண்டதும், அவளால் சகிக்க இயலாத மகா அசங்கியக் காட்சியாக இருந்தது. ஆண் பெண் பாலார் ஆகிய அவர்கள் நால்வரும் கம்பீரமாக நிமிர்ந்து வராமல் ஏதோ பெருத்த குற்றம் செய்துவிட்டவர்கள் உலகத்தைக் கண்டு அஞ்சி அடங்கி ஒடுங்கிக் கிடப்பதுபோல இருந்த தோற்றம், மனோன்மணியம்மாளது மனப்போக்கிற்குச் சிறிதும் ஒவ்வாத இழிந்த நடத்தையாகத் தென்பட்டது. இங்கிலீஷ் நாகரிகம் இருந்த ஊரையே மிதித்தறியாத பரம அநாகரிகர்கள் போல சுயமதிப்பென்பதே இல்லாமல் இருந்த அவர்கள் தனக்கு மாமன், மாமி, மைத்துனன், மைத்துனன் மனைவி என்று தன் மனதால் எண்ணுவதுகூட மனோன்மணியம்மாளுக்குச் சகிக்க ஒண்ணாத சிறுமையாகத் தோன்றியது. அவர்களைப் பார்க்க அவளது கண் கூசியது; தேகம் குன்றியது; மனம் ஏமாற்றமும் சஞ்சலமும் அடைந்தது. அவர்கள் இயற்கையில் நல்ல அழகு வாய்ந்தவளாக இருக்கிறார்கள் என்ற ஓர் ஆறுதலைத் தவிர, மற்ற எவ்வித ஆறுதலும் உண்டாகாதபடி அவர்களது தோற்றமும், நடையுடை பாவனைகளும் மனோன் மணியம்மாளின் மனதிற்கு முற்றிலும் அருவருப்பாகத் தோன்றின. இங்கிலீஷ் பாஷை, இங்கிலீஷ் நாகரிகம் முதலியவற்றைக் கரை கண்டவரும், மேலான பதவியில் உள்ள வெள்ளைக்கார துரைக ளோடு அடிக்கடி பழகுகிறவரு