பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

35

மாசிலாமணி:-அதனால் பாதகமில்லை. ஆள்கள் மறுபடியுந்தான் போகட்டுமே. இரண்டொரு நாள்கள் தானே தாமதப்படும். அதற்குள் குடிமுழுகிப் போய்விடப் போகிறதில்லை.

இடும்பன் சேர்வைகாரன்:- சரி; அப்படியே செய்து விடுவோம். நாளைய தினம் காலையில் நாங்கள் எல்லோரும் இருந்து இந்தக் கலியாணத்தை முடித்து வைக்கிறோம். உடனே நான் பட்டணத்துக்கு இரண்டு ஆள்களை அனுப்பி வைக்கிறேன். நாளைய தினம் சாயுங்காலம் நானே மன்னார்குடிக்குப் போய் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி நடந்து முதலில் கண்ணப்பாவின் காரியத்தை நிறைவேற்றுகிறேன். அதன் பிறகு வடிவாம்பாள் முதலிய மற்றவரைக் கவனிப்போம்.

மாசிலாமணி:-சரி; அப்படியே செய்யும். ஆனால், இந்த வேலையை எல்லாம் நாம் செய்திருக்கிறோம் என்ற சந்தேகமாவது குறிப்பாவது ஏற்படாதபடி அவ்வளவு தந்திரமாக நீர் எந்தக் காரியத்தையும் நடத்த வேண்டும்; ஜாக்கிரதை.

இடும்பன் சேர்வைகாரன்: அதைக்கூடவா நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பிறர் கண்டு கொள்ளும்படி நான் எதையும் செய்துவிடப் போகிறேன் என்ற கவலையே உங்களுக்கு வேண்டியதில்லை.

மாசிலாமணி:-சரி; நீர் இரண்டு நாளாக நிரம்பவும் பாடுபட்டு இருக்கிறீர். இரவில் தூங்கியே இருக்கமாட்டீர்; நீர் போய் வேலைக்காரிக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி, அவளை மனோன் மணி அம்மாளிடம் அனுப்பிவிட்டுப் போய்க் கொஞ்சம் படுத்துத் தூங்கும். நானும் படுத்துக் கொள்ளுகிறேன் - என்றான்.

அவ்வளவோடு அவர்களது சம்பாஷணை முடிவுற்றது. இடும்பன் சேர்வைகாரன் மாசிலாமணியிடம் செலவு பெற்றுக் கொண்டு அவ்விடத்தை விடுத்துச் சென்றான்.

இனி நாம் மாசிலாமணியை விடுத்துக் கந்தசாமியைக் கவனிப்போம். மூன்றாவது உப்பரிகையில் நிரம்பவும் ரகசியமாக