பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

மாயா விநோதப் பரதேசி

கலந்து, ஜீவனோபாயப் போரில் ஈடுபட்டு உழல்வதென்றால், அதைக் காட்டிலும் வெட்கக் கேடான செய்கை வேறு உண்டா? அவ்வாறு தமது பெண்டீரையும் பொருள்தேட அனுப்பும் புருஷரை நாம் என்ன வென்று சொல்வது! ஸ்திரீகள் இயற்கையிலேயே புருஷரைக் காட்டிலும் மிக்க மிருதுத்தன்மை உடைவர்களாய் இருப்பதில் இருந்தே, இருவரும் வெவ்வேறு வேலைகளைச் செய்வதற்காக இருவிதமாக அமைக்கப் பட்டிருக்கின்றனர் என்பது பிரத்தியக்ஷமாகத் தெரிகிறதல்லவா? மனிதர் இல்லறம் நடத்துவதில் பொருள் தேடுவதொன்றுதான் முக்கியமான காரியமா? ஆண்பிள்ளைகள் திறமையோடு பொருள் தேடுவதற்கு அவர்களது தேகம், பசி, நோய், முதலிய இடையூறுகள் இன்றி ஆரோக்கியமான நிலைமையில் இருப்பது அத்தியாவசியமான முதல் காரியம் அல்லவா? அது போலவே அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் செழுமையாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ந்து பிற்காலத்தில் தமது தந்தையாரது பொறுப்பை ஏற்றுக் கொள்வது அவசியமான காரியமல்லவா? சுவரை வைத்துக் கொண்டு தானே சித்திரம் எழுத வேண்டும்? மனிதர் தமது உடம்பை போஷிப்பதற்காகத்தானே திரைக் கடலோடியும் திரவியம் தேடுகிறார்கள். அப்படித் தேடும் பணத்தை ஆகாரமாகவும், சுக செளகரியங்களாகவும் மாற்றி உதவுதற்கு ஒருவர் வேண்டாமா? ஆண்மக்கள் பணம் தேடுவது துணைக்கருவியேயன்றி, ஆகாரம் முதலியன தயாரித்து ஊட்டுவது முதல் கருவியல்லவா? அப்படிப்பட்ட ஜீவாதாரமான பொறுப்பை நம்முடைய ஸ்திரீகள் ஏற்று நடத்திவருவதற்கு இழுக்கென்றால், அதைவிட மடமையான எண்ணம் வேறு என்ன இருக்கிறது? வீட்டில் நிழலில் இருந்து தனது பர்த்தா, தனது அருமைக் குழந்தைகள் ஆகிய தனது அரிய பந்துக்களுடைய தேக போஷணைக்குரிய காரியங்களைச் செய்து அன்பாகிய தேவாமிருதத்தால் அவர்களை இன்புறுத்தி, அவரவர் தத்தம் கடமைகளை இடையூறின்றி நடத்தும்படி செய்வது இழிவான செய்கையா? அதைவிட்டு, அவள் தனது புருஷருக்கும், குழந்தைகளுக்கும் தேக ஆரோக்கியம் கெடும்படி விட்டு, வெளியில் சென்று பல துறைகளில் ஓடியாடி உழன்று