பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

மாயா விநோதப் பரதேசி

இவர்கள் பிள்ளை பெறுவதற்கும் சமையல் செய்வதற்கும் உபயோகப்படும் உயிரற்ற யந்திரங்கள் என்றும் சொல்ல இழிவாகக் கூறுகின்றார்கள். அவர்கள் அவ்வாறு கூறுவது அறியாமையே அன்றி வேறல்ல. அவர்களுடைய ஸ்திரீகளோ புஸ்தகங்களைப் படித்தும் உண்மையான அறிவைப் பெறாமல், உலக தந்திரங்களைக் கற்று, பணம் பணம் என்று பேயாய்ப் பறந்து, சதாகாலமும் பட்சிபோல இரை தேடித் திரிந்து கொண்டே இருப்பதையே அபாரமான பெருமையாக மதித்துப் பேசுகிறார்கள். குழந்தைகளைப் பெறுவதும், அவைகளை வளர்ப்பது, ஆகாரங்கள் தயாரித்துத் தமது குழந்தைகளையும் புருஷரையும் போஷித்துக் காப்பாற்று வதும் அவர்களுக்கு இழிவான செய்கையாகத் தோன்றுகிறது என்றால், அவர்களை நாம் மெல்லிய தன்மையுடைய ஸ்திரீகள் என்று கருதுவதை விட்டு, சேலைகட்டிய புருஷர்கள் என்றுதான் மதிக்க வேண்டும். அநேகமாய் நமது ஸ்திரீகள் ஒவ்வொருவரும் முதல்தரமான போஜனம் தயாரிக்கும் திறமையை இயற்கையி லேயே சம்பாதித்துக் கொள்வதோடு, குழந்தையைப் பெற்று வளர்ப்பதற்கான மருத்துவங்களையும் சிகிச்சைகளையும் கற்று வீட்டில் ஆகவேண்டிய பொறுப்புகள் யாவற்றையும் தாமே நிறைவேற்றும் ஆற்றலுடைய அபார சாமர்த்தியசாலிகளாக இருக்கின்றனர். வெள்ளைக்கார ஸ்திரீகளின் வீட்டிலோ அவர்களால் எந்தக் காரியமும் ஆகிறதில்லை. அவர்களுக்கு வேண்டிய ரொட்டி முதலிய ஆகாரங்கள் கடையில் இருந்தும், போஜன சாலைகளில் இருந்தும் வரவேண்டும். தலைவலி என்றாலும், பிள்ளைப் பேறென்றாலும், டாக்டர் வரவேண்டும். குழந்தைகளுக்குப் பால் ஊட்ட செவிலித்தாய் வேண்டும். உடைகள் தோய்க்க, வண்ணான் வேண்டும். உடுப்புகள் அணிந்து விடத் தாதி வேண்டும். அவர்களுடைய வீடுகளில் விருந்தாளிகள் வந்துவிட்டால், விருந்து ஹோட்டல்களில்தான் நடக்க வேண்டும். வெளியில் சென்று உத்தியோகம் பார்த்துப் பொருள் தேடிக்கொண்டு வரும் புருஷர்கள் வீட்டில் எந்தக் காரியமும் செய்யாமல் உதவி அற்றவராய் இருப்பது போல, இங்கிலிஷ்கார ஸ்திரீகளும் வீட்டில் உபயோகம் அற்றவராய்