பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

53

தொழிலைக் குத்தகையாக ஏற்றுக்கொண்டு செய்கிறவர்கள் முதலிய எவருக்கும் இழிவென்பதே கிடையாது. அப்படிப்பட்ட கொள்கையை வைத்துள்ள இங்கிலீஷ்காரர்கள் நம்முடைய ஸ்திரீகள் தங்கள் தங்கள் புருஷர்கள், குழந்தைகள் முதலியோருடைய தேக போஷணைக்குரிய அலுவல்களை வகித்துப் பார்ப்பதை ஏளனமான காரியமாய் மதித்து ஏன் தூற்றுகி றார்களோ தெரியவில்லை. எல்லோரும் தம்மால் இயன்ற வரையில் பணம் தேட வேண்டும் என்பது அவர்களுடைய முக்கியமான நோக்கம் அல்லவா? சக்கிலியன், வண்ணான் முதலியோர் ஏராளமாக பணம் சம்பாதிக்கிறார்கள் ஆகையால், அவர்களுடைய தொழில் இழிவானதல்ல. நம்முடைய ஸ்திரீகள் வீட்டில் இருந்து சமையல் செய்து சாப்பாடு போட்டுக் கொண்டிருப்பதில், அவர்களுக்கு யாதொரு வரும்படியும் இல்லையல்லவா? அதனால் அவர்கள் செய்யும் தொழிலை இழிவான தொழில் என்று கருதுகிறார்கள் போலும் நம்முடைய ஸ்திரீகளுள் இங்கிலிஷ் படித்து உத்தியோகம் வகித்து மாசம் நூறு, இரு நூறு சம்பாதித்து வந்தால், அந்தத் தொகையில் 15, 20 சம்பளம் கொடுத்து ஒரு வேலைக்காரியை வைத்துக் கொண்டால் அவள் வீட்டுக் காரியங்களை எல்லாம் பார்த்துக் கொள்வாள். நம்முடைய ஸ்திரீகளின் வருமானத்தில் பெரும் பாகத்தை மிச்சப்படுத்தி விடலாம் என்பதே வெள்ளைக்காரருடைய யோசனை. ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை மாத்திரம் எண்ணுவதில்லை. ஒவ்வொரு மனிதரும் படிக்க வைத்து உத்தியோகத்துக்கு அனுப்பிவிட்டால், பிறகு வேலைக்காரிக்கு எங்கே போவது என்பதை அவர்கள் எண்ணுகிறதில்லை. அது நிற்க, ஒரு வீட்டில், ஒருவனுடைய மனைவியே அந்த வீட்டின் காரியங்களைப் பார்த்து, தத்தம் புருஷர் குழந்தைகளின் தேவைகளைக் கவனித்து வேளாவேளைக்கு அவர்களுக்குரிய காரியங்களைச் செய்வதைப் போல வேலைக்காரிகள் அவ்வளவு அக்கறையோடும், உண்மையான கணிகரத்தோடும், அந்தரங்க மான பிரியத்தோடும் செய்வார்களா? வீட்டில் உள்ள புருஷன், மனைவி, பிள்ளைகள் ஆகிய மூன்று வகுப்பாரும் சத்திரத்தில் சாப்பிடுவது போல வேலைக்காரியிடம் சாப்பிட்டு ஒருவருக்