பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

மாயா விநோதப் பரதேசி

எப்படி வந்திருப்பேன் ஆற்றங்கரை இவ்வளவு பக்கத்தில் இருப்பதைப் பார்த்தால், இது அநேகமாய் சிந்தாதிரிப் பேட்டை என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. அந்தப் பேட்டையில் தான் வீடுகளுக்குக் கிழக்குத் திக்கில் ஆறு போகிறது. என்ன கருத்தோடு என்னை இவர்கள் சிந்தாதிரிப் பேட்டைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒருவேளை இது போலீஸ் ஸ்டேஷனோ என்று சந்தேகிப்பதற்கும் இடமில்லை. போலீஸ் ஸ்டேஷனில் கருங்கல்லினாலும் இரும்பினாலும் சூழப்பட்ட வெறும் அறையான சிறைச்சாலையே (லாக்கப்) இருக்குமன்றி இப்படிப்பட்ட ஒரு மகாராணியின் அந்தப்புரம் இருப்பதற்கு ஏதுவில்லை அல்லவா? ஆகவே, இது போலீஸ் ஸ்டேஷனல்ல. இது எந்த இடமாகவாவது இருக்கட்டும். இந்த இடத்திற்கு நான் எப்படி வந்தேன் என்பதல்லவா விளங்கவில்லை. ஒர் அற்ப ஒசை கேட்டாலும், நான் வழித்துக் கொள்ளக் கூடியவன். நான் படுத்திருந்த சோபாவோடு இவர்கள் என்னை ஜாக்கிரதையாகத் தூக்கிக் கொண்டு வந்திருந்தால்தான் என்ன? ஒரு பங்களாவின் மேன் மாடத்தில் இருந்து கீழே இறங்கி, இன்னொரு பங்களாவின் உப்பரிகையில் ஏறும்போது, அந்த சோபா அசையாமலா இருந்திருக்கும். அதுவுமன்றி, என்னைத் தூக்கி வந்த ஆள்கள்தான் ஒரு வேளை நிரம்பவும் எச்சரிக்கையாகவும் நடந்து சந்தடி செய்யாமலே இருந்தாலும், ஒரு பங்களாவில் இருந்து இன்னொரு பங்களாவிற்குப் போவதற்குள் நடு வழியில் ஏதாவது அற்ப ஓசை கூடவா உண்டாகாமல் இருந்திருக்கும்? கொஞ்சம் அசைவாவது, ஒசையாவது உண்டாகி இருந்தால் நான் எப்படியும் விழித்துக் கொண்டிருப்பேனே ஒன்றும் இல்லாமல் இவ்வளவு பெருத்த மாறுபாட்டை எப்படி நிறைவேற்றினார்கள்? ஒருவேளை நான் எருமை மாட்டைப் போல அடியோடு உணர்ச்சியில்லாமல் கடுமையான தூக்கத்தில் ஆழ்ந்து போயிருந்திருக்கலாமா? அல்லது, இப்போது நான் காண்பது கனவா? ஒருவேளை நான் இன்னம் பட்டாபிராம பிள்ளையின் பங்களாவிலேயே தூங்கிக் கொண்டிருக்கிறேனா? அல்லது நானும் கோபாலசாமியும் பட்டாபிராம பிள்ளையின்