பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

மாயா விநோதப் பரதேசி

தலைவிதி இவருக்கு நான் பெண்ஜாதி ஆக வேண்டும் என்று! இருக்குமானால் அதை நான் தடுக்க முடியாது. நடப்பது நடக்கட்டும். ஆனால், இவர் நேராக என் தகப்பனாரிடம் வந்து பேசி, என்னைக் கலியாணம் செய்து தரும்படி கேட்டிருக்கலாம். அவரும் அநேகமாய் அதற்கு இணங்கி இருக்கலாம். அப்போது எவருக்கும் சிரமமில்லாமல் நாங்கள் உலகத்தார் அறிய புருஷன் பெண்ஜாதி ஆகி இருக்கலாம். இப்படிப்பட்ட மூடுமந்திரம் எல்லாம் அவசியமாக இருந்திராது. சரி; நடந்தது நடந்துவிட்டது. இனி இதைப்பற்றிக் கவலைப்படுவதில் உபயோகமில்லை. இவர் எப்போது என்னைக் கண்டு என்மேல் ஆசை கொண்டாரோ, இவர் என்னை அன்பாகவும் பட்சமாகவும் நடத்துவார் என்பதைப் பற்றி சந்தேகமில்லை. என் தகப்பனாரும் கூட இருந்து இந்தக் கலியாணத்தை நடத்தி வைக்கவில்லையே என்ற ஒரு விஷயந்தான் என் மனசிற்குக் குறையாக இருக்கிறது. அதைத் தவிர, வேறே எதைப்பற்றியும் நான் விசனப்படவில்லை. என்னை இவர் பலதடவைகளில் பார்த்திருக்கிறார் என்று நீ சொல்லுகிறாய். ஆனால், நான் இவரைப் பார்த்திருக்கிறேனோ இல்லையோ என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஒருவேளை நான் இவரை இதற்கு முன் பார்த்தும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனாலும், என்மேல் இவ்வளவு பிரியம் வைத்து, பற்பல ஏற்பாடுகளைச் செய்து என்னைக் கொண்டு வந்து கட்டிக்கொள்ள உத்தேசித்திருக்கும் மனிதர் பார்வைக்கு எப்படி இருக்கிறார் என்று பார்க்க வேண்டும் என்ற ஓர் ஆசை உண்டாகிறது. ஆனால் அவரையே நேரில் பார்ப்பதற்கு நிரம்பவும் லஜ்ஜையாக இருக்கிறது. அவருடைய புகைப்படம் ஏதாவது இருக்குமானால் அதை நீ எடுத்து வந்து எனக்குக் காட்டினால், அதுவே போதுமானது. மற்ற விஷயங் களைப் பற்றி நான் அவரிடத்திலேயே பிற்பாடு பேசிக்கொள் கிறேன்" என்றான்.

அவன் யாதொரு ஆட்சேபனையும் கூறாமல் அவ்வளவு எளிதில் வழிப்பட்டு வந்ததைக் கண்ட வேலைக்காரி அளவற்ற