பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மாயா விநோதப் பரதேசி கோமளேசுவரன் பேட்டையில் உள்ள எங்கள் கிரகத்திற்குக் கூடப் போவது என் மனதிற்கு உறுத்தலாக இருக்கிறது. இருந் தாலும் வேறே வகை இல்லாதபடியால், அங்கே போகவேண்டி இருக்கிறது. இனி பையன் திரும்பி வந்த பிறகு, நாம் இந்த நிச்சய தார்த்தத்தை நடத்தத் தொடங்கினால், நாங்கள் அந்த வீட்டை விட்டுப் புறப்பட்டு எங்கேயாவது போய் இருந்துவிட்டு நல்ல நாள் பார்த்துக் கொண்டு தான் மறுபடி அந்த வீட்டிற்கு வந்து - அந்தச் சுப காரியத்தை நடத்த வேண்டும் என்று நினைத்திருக்கி றோம். ஆகையால், நாம் ஒரு காரியம் செய்வோம். நாள் இருந்த படி இருக்கட்டும் என்று நாங்கள் இப்போது கோமளேசுவரன் பேட்டைக்கே போகிறோம். இன்று புதன்கிழமை அல்லவா? இதற்கடுத்தாற்போல ஏதாவது நல்ல நாள் வாய்த்தால், அன்று புறப்பட்டு உங்களுடைய பங்களாவிற்கே நாங்கள் வந்து விடுகிறோம். அதுவரையில் தாங்கள் எங்களை மன்னித்துக் கொள்ள வேண்டுகிறேன்" என்று நிரம்பவும் பணிவாகக் கூறினார். பட்டாபிராம பிள்ளை, "சரி, எந்த விஷயத்திலும் அடியேன் உங்களுடைய பிரியப்படி நடக்கக் காத்திருக்கிறேன். உங்கள் யோசனைப்படியே செய்வோம். எல்லாவற்றிற்கும் நான் ஒரு வாடகை மோட்டார் வண்டி பேசித் தயாராய் வைத்திருக்கிறேன். அதில் நாம் கோமளேசுவரன் பேட்டைக்கு வேண்டுமானாலும் போகலாம். என்னுடைய பங்களாவிற்கு வேண்டுமானாலும் போகலாம்; அதில் 8-பேர் உட்காரலாம். நான் கோமளேசுவரன் பேட்டை வரையிலாவது வந்து உங்களை உங்கள் ஜாகையில் சேர்த்து விட்டு வருகிறேன். அவ்விடத்தில் உள்ள வேலைக் காரியைக் கண்டு, அவளிடம் பேசி நம்முடைய கந்தசாமியும், இந்த கோபாலசாமியும் ஒருவருக்கொருவர் எவ்வித மாக நடந்து வந்தார்கள் என்பதைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு வர உத்தேசிக்கிறேன் என்றார். வேலாயுதம் பிள்ளை, "சரி: அப்படியே செய்யுங்கள்" என்றார். பட்டாபிராம பிள்ளை, "ஏன் நாம் வெளியில் போகலாம் அல்லவா?" என்றார். . . .