பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 மாயா விநோதப் பரதேசி புரண்டு திங்கட்கிழமை பகலையும் இரவையும் கழித்தான். தான் செய்த சதியாலோசனை பலியாமல் போன ஏமாற்றம் ஒரு புறத்தில் வதைக்க, தனது ஆருயிர்க் கண்ணாட்டியான ரமாமணியம்மாள் மூக்கறுபட்டு விகார மடைந்து, தான் அருவருக்கத் தக்க நிலைமையை அடைந்த ஆராத் துயரம் இன்னொரு புறம் உலப்ப, அவர்கள் சென்னையில் எவ்விதமான சிக்கலில் அகப்பட்டுக் கொண்டார்களோ என்ற கவலையும், அதனால் தனக்கு எவ்விதமான பொல்லாங்கு சம்பவிக்குமோ என்ற பெருந் திகிலும் எழுந்து அவனைக் கப்பிக் கொண்டன. ரமாமணியம்மாள் மாத்திரம் கலியாணக் கும்பலில் நுழைந்து கொண்டு எதிரிகளுக்குக் கெடுதல் செய்யும்படி தான் ஏற்பாடு செய்திருக்க, அவளோடு அவளது தாய் தகப்பன் முதலிய மற்றவர்கள் எதற்காகப் போனார்கள் என்ற விஷயத்தை அவன் நினைத்து நினைத்துப் பார்த்து எவ்வித முடிவிற்கும் வரமாட்டாது தத்தளித்தான். அவர்களோடு சென்ற இடும்பன் சேர்வைகாரனும், அவனது ஆட்களும் மறுநாளே திரும்பி கும்பகோணத்திற்கு வந்து சேராமல் இருந்தது அவனால் சகிக்க இயலாத வேதனையை உண்டாக்கிக் கொண்டிருந்தது. சென்னையில் உண்மையில் என்ன நடந்ததென்ற முழு விவரத்தையும் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பெருத்து காட்டுத்தி போல அவனது மனத்தில் மூண்டு பற்றி எரிந்ததானாலும், அதை எப்படி அறிவது என்பதை உணராதவ னாய்த் துடிதுடித்துக் கிடந்தான். அந்த நிலைமையில் தானே நேரில் சென்னைக்குப் போவது அவனுக்கு உசிதமாகத் தோன்ற வில்லை. வேறே ஆட்களை அனுப்பினால், அவர்கள் ஏதாவது தவறு செய்து, தனது கவலையையும் விசனத்தையும் அதிகரிக்கச் செய்து விடுவார்களோ என்ற நினைவும் தோன்றியது. ஆகவே, அவன் தான் என்ன செய்வதென்பதை நிச்சயிக்கமாட்டாமல், எந்த நிமிஷத்தில் போலீசார் தன் தலைக்கு ஏதாவது பொல்லாங்கு கொண்டு வருவார்களோ என்றும் நினைத்து நினைத்து அப்படியே தவித்துக் கிடந்தான். தன்னிடத்தில் இருந்து தப்பிப்போன சோபனப் பெண் உடனே சென்னைக்குப் போய் வேலாயுதம் பிள்ளை முதலியோரை எச்சரித்துத் தப்ப வைத்ததோடு அவர்களுக்குப்