பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 மாயா விநோதப் பரதேசி அப்படியே ஸ்தம்பித்து கால் நாழிகை காலம் வரையில் உட்கார்ந் திருந்த பின் எதிரில் மனிதன் நிற்கிறான் என்பதையும், அவனுக் கெதிரில் தான் தனது உணர்ச்சிகளை காட்டிக் கொள்ளாமல் அவனுக்கு மறு மொழி எழுதிக் கொடுத்தனுப்ப வேண்டும் என்பதையும் எண்ணி நிரம்பவும் பாடுபட்டு தன்னை ஒருவாறு சமாளித்துக் கொள்ளத் தொடங்கினான். அவனது அப்போதைய விபரீதமான மனக் குழப்பத்தில், தனக்கு வந்த இரண்டு கடிதங் களின் எழுத்துகளையும் ஒத்திட்டுப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவனது மனத்தில் தோன்றவில்லை. அவனது மூளை கலங்கிச் சுழல ஆரம்பித்தது ஆகையால், தான் அப்போது இருந்தது எந்த இடம் என்பதும், கந்தசாமி பெண் வேஷத்தில் வந்து தப்பிப்போன விஷயமாகத் தான் இனி என்ன செய்ய வேண்டியது என்பதும் அவனுக்குத் தோன்றவில்லை. இடும்பன் சேர்வைகாரன் தபால் மூலமாய் அனுப்பிய கடிதத்தில் எழுதி இருப்பதுபோல தான் மறு மொழிக் கடிதம் எழுதி அந்தப் பட்டணத்தாரிடம் கொடுத்து அனுப்பியபின் மற்ற விஷயங் களைப் பற்றி நிதானமாய் யோசனை செய்து, தான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று மாசிலாமணி முடிவு செய்து கொண்டவனாய்த் தனக்கெதிரில் நின்ற பட்டணத் தானை நோக்கித் தனது இயற்கைப்படி நிரம்பவும் இறுமாப்பாகவும் துடுக்காகவும் பேசத் தொடங்கி, "ஐயா! இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் என் மனசில் உண்டாகும் கோபம் இவ்வளவு அவ்வளவல்ல. நீர் வேறே ஒருவரால் அனுப்பப்பட்ட கூலிக்காரர் ஆகையால், என்னுடைய கோபத்தை உம்மிடம் காட்ட நான் இஷ்டப்படவில்லை. ஆகவே, நான் இந்நேரம் பாடுபட்டு என் கோபத்தை அடக்கிக் கொண்டேன். இந்தக் கடிதம் எழுதியிருப்பவன் யாரோ திருட்டு நாய். அவனுக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. அவன் இதற்கு முன் இந்த ஊரானாய் இருக்கலாம். ஏதாவது யாசகத்தின் பொருட்டு அவன் என்னிடம் வந்து என்னைத் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், அவன் இன்னான் என்பது எனக்குத் தெரியவில்லை. அவன் கோரும் உதவியைச் செய்வ தற்கும் நான் தயாராக இல்லை. அப்படிப்பட்ட சர்க்காருக்கு விரோதமான காரியத்தில் நான் ஒருநாளும் இறங்கக் கூடியவனல்ல.