பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1 15 அவனையும் நான் கைவிடாமல் பதினாயிரமல்ல, லட்சமல்ல, செலவு செய்து அவனைக் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அவனாலும் பெருத்த விபரீதம் விளைந்து விடும். நான் போகாமல், வேறே யாரையாவது அனுப்பலாம் என்றால், இப்படிப்பட்ட மகா முக்கியமான காரியங்களை எல்லாம் சாமர்த்தியமாக நிறைவேற்றத் தகுந்த திறமைசாலியான ஆள் எவனுமில்லை. இந்த தர்மசங்கடத் தில் நான் என்ன செய்கிறதென்பது தெரியவில்லையே! ஆகா! என்ன செய்வேன்! அன்றைய தினம் சமாசாரப் பத்திரிகையில் வெளியான செய்தியில் பக்கிரியா பிள்ளை என்ற தவில்காரன் ஒருவனும் அவர்களோடு கூடயிருந்ததாகவும், இடும்பன் சேர்வை காரனுடைய ஆட்கள் அவனுடைய முகத்தில் அக்கினித் திரா வகத்தை ஊற்றி விட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறதே. அவன் யார் என்பதும், அவன் ரமாமணியம்மாள் முதலியோருடன் இருக்க வேண்டிய காரணம் என்ன என்பதும் தெரியவில்லையே! என்று மாசிலாமணி பலவாறு எண்ணமிட்டுத் தத்தளித்து வாடித் துவண்டு மூடி முக்காடிட்டு விசனமே வடிவாகப் படுத்திருந்தான். சென்னையிலிருந்து கடிதம் கொணர்ந்த மனிதன் வெளியில் போய்க் கால் நாழிகை நேரத்தில் மாசிலாமணியின் வேலைக்காரன் மறுபடி உள்ளே வந்து, "எஜமானே எஜமானே!" என்று மெது வாய்க் கூப்பிட, மாசிலாமணி திடுக்கிட்டுத் தனது போர்வையை விலக்கிக் கொண்டு, எழுந்து உட்கார்ந்து, "என்ன விசேஷம்?" என்று ஆவலோடு வினவினான். வேலைக்காரன், "சாமீ. வாசலில் யாரோ ஒரு பெரியம்மாள் வந்திருக்கிறார்கள்; சென்னப்பட்டணம் ஆஸ்பத்திரியில் உள்ள நம்முடைய ரமாமணியம்மாளிடம் இருந்து கடிதம் கொண்டு வந்திருக்கிறார்களாம்" என்று கூறினான். அதைக் கேட்ட மாசிலாமணி திடுக்கிட்டு, "ஆ! அப்படியா! அந்த அம்மாள் பார்வைக்கு எப்படி இருக்கிறார்கள்?" என்றான். வேலைக்காரன், "வயசு ஐம்பது, ஐம்பத்தைந்துக்கு மேல் இராது. பார்ப்பதற்குத் தக்க பெரிய இடத்து மனிதர் போல இருக்கிறது. கையில் மடிசஞ்சி மூட்டை ஒன்று இருக்கிறது. இடுப்பில் நார்மடிப் புடவை கட்டிக் கொண்டு, விபூதி, உருத்திராக்ஷம் முதலிய வைதிகக் கோலங் களோடு இருக்கிறார்கள்" என்றான்.