பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1 49 செய்த கருமத்தின் பலனை அவர்கள் வெட்கப்படாமல் அனுப வித்தே தீரவேண்டும். இருந்தாலும் நீ கவலைப்படாதே. இந்த விஷயங்களுக் கெல்லாம் நான் புதிய மாதிரியான ஒரு பரிகாரம் கண்டுபிடித்திருக்கிறேன். உனக்கு ரப்பரினால் மூக்கும், உன் தாய் தகப்பன்மார்களுக்கு ரப்பர் காதுகளும் இன்னம் பதினைந்து தினங்களில் நான் தயார் செய்து கொடுக்கிறேன். வேற்ே எந்த டாக்டருக்கும் அதைச் செய்யும் வழி தெரியாது. வில் வைத்த அந்த மூக்கு காதுகள் நிஜமானவை போலவே இருக்கும். அவைகளை முகத்தில் ஒட்ட வைத்திருக்கும் சுவடே தெரியாது. நீ பேசும் போது ங்ொன ங்ொணவென்ற விகாரமான ஓசையும் உண்டாகாது. முகத்தின் அழகு கொஞ்சமும் கெடாது. வெகு சீக்கிரம் நான் மூக்கு, காதுகளைத் தயார் செய்து போடுகிறேன். அதற்குள் இந்த ரணங்கள் ஆறட்டும்" என்று சொல்லி வாக்களித்து விட்டுப் போயிருக்கிறார். ஆகையால், என்னை நீங்கள் மறுபடி பார்க்கும் போது, நான் உங்களுடைய பழைய ரமாமணியாகவே இருப்பேன். அதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். இன்னம் 20-தினங்களில் நாங்கள் கூேடிமமாய் அங்கே வந்து சேருவோம். அதற்குள் சேர்வைகாரரும் விடுதலை அடைந்து விடுவார். இந்தக் கடிதம் கொண்டு வரும் அம்மாள் தக்க பெரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள்; எங்களிடம் அபாரமான வாத்சல்யம் வைத்தவர்கள். இவர்கள் நீதிநெறி தவறாமல் நடக்கிறவர்கள் ஆனாலும், நமக்காக இடும்பன் சேர்வைகாரரைக் காப்பாற்ற எண்ணி அங்கே ஒளிந்து கொள்ள வந்திருக்கிறார்கள். ஆகையால், நீங்கள் இந்த அம்மாளை நிரம்பவும் மரியாதையோடும், கண்ணிய மாகவும் நடத்தி, இவர் களுக்குச் சகலமான செளகரியங்களையும் செய்து கொடுத்து, உங்கள் வீட்டில் யாரும் காணாதபடி இவர்கள் மறைந்திருக்கும்படி செய்யக் கோரி, தங்களுக்குத் திக்கு நோக்கி அநந்தகோடி தண்டனிடும், தங்களை என்றும் மறவாத அடிமை ரமாமணி. என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்து முடிக்கவே, மாசிலா மணிக்கு மூச்சு ஒழுங்காக வரத் தொடங்கியது. பெருத்த ஆவலி