பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 123 எல்லோரும், முக்கியமாய் இந்த ஊர்ப் போலீஸ் இன்ஸ்பெக்டரும் ஜெவான்களும் எங்களுக்கு நிரம்பவும் சிநேகமானவர்கள். அவர்கள் யாராவது அடிக்கடி இங்கே வந்து என்னோடு பேசிக் கொண்டிருந்து விட்டுப் போவார்கள். எனக்குக் கலியாணம் ஆகவில்லை ஆகையால், இந்த வீட்டில் பெண் பிள்ளைகள் யாருமில்லை. நான் மாத்திரம் வேலைக்காரர் வேலைக்காரிகளோடு தனியாக இருந்து வருகிறேன். ஆகையால், போலீசார் முதலிய உத்தியோகஸ்தர்கள் எப்போதும் இங்கே’ வந்து என்னோடு குதுகலமாக இருப்பார்கள். இந்த வீட்டின் எந்தப் பாகத்திற்கும் அவர்கள் தாராளமாக வந்து பழகுவார்கள். நீங்கள் இந்த வீட்டின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் அவர்களுடைய கண்ணில்பட நேரும். அதற்காகத்தான் நான் யோசனை செய்கிறேன். நம்முடைய ரமாமணியம்மாளுடைய வீட்டில் நீங்கள் இருந்தால், உங்களை யாரும் பார்க்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், அவள் தன்னுடைய வீட்டைப் பூட்டித் திறவுகோலைத் தன்னுடன் கூடவே கொண்டு போயிருக்கிறாள். இருந்தாலும் பரவாயில்லை; அவளுடைய வீட்டின் பூட்டிற்கு மறுசாவி போட்டுத் திறந்து உங்களை அங்கேயே வைக்கலாம் என்று நினைக்கிறேன், பூட்டுக் கடைக்காரனை வரவழைத்து அந்தப் பூட்டிற்குத் தகுந்த சாவி ஏதாவது இருக்கிறதா என்று பிரயத்தனப்பட்டுப் பார்க்கச் செய்கிறேன். அது இந்த அவசரத்திற்குச் சரிப்பட்டு வராது. அதை நாளைக்குள் முடிக்கிறேன். அதுவரையில் நீங்கள் இந்த வீட்டி லேயே மூன்றாவது மாடத்தில் இருங்கள். இதோ நானே வந்து உங்களுக்கு இடம் காட்டுகிறேன்" என்று கூறிய வண்ணம் எழுந்து அந்த அம்மாளையும் தன்னுடன் கூடவே அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான். அவனுக்குப் பின்னால் நடந்த நீலலோசனி யம்மாள் மிகுந்த வியப்போடு நாற்புறங்களிலும் தனது பார்வை யைத் திருப்பி, "ஆகா! இந்த இடம் ரிஷி ஆசிரமம் போல மனசிற்கு நிரம்பவும் ரமணியமாக இருக்கிறது. பணம் படைத்தவர்கள் எல்லோரும் பணத்துக்குச் சொந்தக்காரர் ஆகிவிடுவார்களா? தமக்கு ஈசுவரன் கொடுத்த சொத்தைக் காவல் காக்கும் பூதம் போல இராமல், அதைத் தாமும் சரியானபடி அனுபவித்து உலகத்தாருக் கும் உபயோகிக்கிறவர்கள்தான் உண்மையில் தனவந்தர்கள்.