பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#32 மாயா விநோதப் பரதேசி வண்ணம் தனது மடிசஞ்சியில் இருந்த உடன்படிக்கைப் பத்திரத்தை எடுத்து மாசிலாமணியினிடம் கொடுத்தாள். அவன் மிகுந்த ஆவலோடும் வியப்போடும் படபடப்போடும் அந்தப் பத்திரத்தை வாங்கி நிரம்பவும் கவனிப்பாக அதைப் பத்து நிமிஷ நேரத்தில் படித்து முடித்தான். முடிக்கவே, மாசிலாமணிக்கு அது, பூமியோ, ஆகாயமோ என்றும், தான் காண்பது கனவோ நனவோ என்றும் பலவகைப்பட்ட விபரீத எண்ணங்கள் தோன்றி மனப்பிராந்தியையும் கோப வெறியையும் உண்டாக்கின. ரமாமணியம்மாள், பக்கிரியா பிள்ளை, அவளது பெற்றோர் ஆகிய நால்வரையும் தான் கத்தியால் ஒரே வெட்டாக வெட்டிப் போட்டு விட்டு, தானும் தன்னைக் கொன்று கொள்ள வேண்டும் என்ற மூர்க்கமான நினைவும் வீராவேசமும் தோன்றின. ஆயினும் அவர்கள் பட்டணத்தில் இருப்பதையும், தான் அவ்விடம் போகப் கூடாத நிலைமையில் இருப்பதையும் உணர்ந்து அவன் உடனே எதையும் செய்ய மாட்டாதவனாய் நிலை கலங்கி அப்படியே சிறிது நேரம் ஓய்ந்து நின்றபின் நீலலோசனியம்மாளை நோக்கி நிரம்பவும் அன்பாகப் பேசத் தொடங்கி, "அம்மா! பத்திரத்தைப் படித்துப் பார்த்தேன். உண்மை விளங்கிவிட்டது. ரமாமணி வெளிக்கு மகா சுத்தமானவள் போல நடித்து, ரகசியத்தில் அந்த முரட்டுப் பையனிடம் சம்பந்தமாக இருந்து வருகிறாள் என்பது நன்றாகத் தெரிகிறது. அதற்கு அவளுடைய தாய் தகப்பன்மார் களும் உடந்தையாகவும் உதவியாகவும் இருந்து வருகிறார்கள் என்பதும் பிரத்தியகூஷமாகத் தெரிகிறது. ரமாமணியின் புருஷர் இந்த ஊரில் மகா கண்ணியம் வாய்ந்த வக்கீல்; அவரை நான் என்னுடைய சொந்த அண்ணன் போல மதித்து வந்தேன். அவர் இறந்த பிறகு இவர்கள் சீர்குலைந்து போய்விடாமல், பலவகையில் நான் இவர்களுக்கு உதவி செய்து இவர்களுடைய சொத்து சுதந்திரங்களை எல்லாம் சீர்படுத்தி இவர்களை க்ஷேமமாய் இருக்க வைத்தால், இவர்கள் இப்படிப்பட்ட மானக்கேட்டில் இறங்கி இருக்கிறார்கள். அந்த ரமாமணியம்மாளை நான் என்னுடைய சொந்த அண்ணி போல மதித்து, நிரம்பவும் மரியாதையாகவும் மதிப்பாகவும் நடத்தி வந்தேன். அவள் வெளிப்பார்வைக்கு மகா