பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மாயா விநோதப் பரதேசி மறுமொழி எதையும் கூறாமல் மெதுவாகக் கட்டிலை விட்டிறங்கி நீலலோசனியம்மாளைப் பின் தொடர்ந்து வெளியில் சென்றாள். விஷயம் இன்னதென்பதை அறியாமல் மற்றவர்கள் பெருத்த வியப்பும் திகைப்பும் அடைந்து ஆவலே வடிவாகத் தவித்திருந் தனர். கூடத்திலிருந்து சென்ற நீலலோசனியம்மாளும், ரமாமணி யம்மாளும் அதற்கு வெளியில் இருந்த தாழ்வாரத்தை அடைந்தனர். பிறர் காதில் விழாதபடி மறைவாக இருந்து தாம் சம்பாவிப்பதற்கு எந்த இடம் தகுதியானது என்று ஆராய்ந்து பார்ப்பவள் போல நீலலோசனியம்மாள் தனது முகத்தை நாற்புறங்களிலும் திருப்பி மூலை முடக்குகளை எல்லாம் பார்த்தாள். ஆஸ்பத்திரியின் சிப்பந்திகள் ஆங்காங்கு உட்கார்ந்து கொண்டும், அப்போதைக்கப்போது போய் வந்து கொண்டும் இருக்கவே, அதைக் கண்ட நீலலோசனியம்மாள், "நாம் கால் நாழிகை நேரம் தனியாக இருந்து ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும். அது பிறர் காதில் படக்கூடாத பரம ரகசியமான விஷயம். எங்கே பார்த்தாலும் மனிதர் இருக்கிறார்கள்" என்று ரமாமணியம்மாளிடம் கூறியபடியே, அந்தத் தாழ்வாரத்தின் வழியாகச் சிறிது தூரம் அப்பால் போய் அவ்விடத்தில் இருந்த ஒர் அறைக்குள் எட்டிப் பார்த்து விட்டு மறுபடி திரும்பி ரமாமணி யம்மாளிடம் வந்து; "அம்மா! அதோ இருக்கிறதே அறை, அதற்குள் யாருமில்லை. அங்கே போவோம் வா" என்றாள். ரமாமணியம்மாள் அதற்கிணங்கி, நீலலோசனியம்மாளைப் பின்பற்றிச் செல்ல, அடுத்த நிமிஷம் அவர்கள் இருவரும் அந்த அறைக்குள் சென்றனர். அந்த அறையின் ஜன்னல் கதவுகள் எல்லாம் மூடப்பட்டிருந்தன ஆனாலும், வாசற்படியின் வழியாகவும், கூரையில் வைக்கப் பட்டிருந்த கண்ணாடியின் வழியாகவும் வந்த வெளிச்சத்தினால் அதன் உள்பக்கத்தில் போதுமான பிரகாசம் இருந்தது. அந்த அறையின் ஒரு பக்கத்து ஜன்னலோரமாய் ஒரு விசிப்பலகை போடப்பட்டிருந்தது. அந்த இடம் நன்றாகப் பெருக்கித் தண்ணினால் அலம்பப்பட்டிருந்தமையால், அறையின் எல்லா பாகமும் மகா பரிசுத்தமாகக் காணப்பட்டது. அவர்கள் இருவரும்