பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+44 - மாயா விநோதப் பரதேசி சொத்து முழுதையும் கும்பேசுவர சுவாமிக்கு எழுதி வைத்து, மாசிலாமணிப் பிள்ளையைத் தர்மகர்த்தாவாக நியமித்து எல்லா வற்றையும் அவரிடம் ஒப்படைக்கப் போகிறேன். மாசிலாமணிப் பிள்ளைக்கு வேண்டிய வக்கீல் ஒருவர் மயிலாப்பூரில் இருக்கிறாராம். அவருக்கு மாசிலாமணிப் பிள்ளை இது விஷயமாய் ஒரு கைக்கடிதம் கொடுத்திருக்கிறார். இப்போது நான் அங்கே தான் போகிறேன். அதற்கு முன் இங்கே வந்து என் உத்தேசத்தை உன்னிடம் வெளியிட்டு விட்டுப் போகலாம் என்று வந்தேன் என்றாள். . அதைக் கேட்ட ரமாமணியின் மனம் விவரிக்க இயலாதபடி தவித்தது. நீலலோசனியம்மாளுடைய ஐந்து லட்சம் ரூபாயைத் தாம் அபகரிக்க எண்ணிய எண்ணம் பலிக்காமல் போய் விட்டதே என்ற ஏமாற்றமும், துக்கமும் எழுந்து அவளது மனதில் பெருத்த ஆத்திரத்தையும், கோபத்தையும் உண்டாக்கின. தங்களுக்கு வர இருந்த அபார சம்பத்தை மாசிலாமணி தன் மேல் திருப்பிக் கொள்ளப் போகிறானே என்ற பொறாமையும், வயிற்றெரிச்சலும் பிரம்மாண்டமாக மூண்டெழுந்தன. அடக்க இயலாத கோபமும், ஆவேசமும், அவளது மனத்தில் பொங்கி எழுந்தன. தான் அதற்கு மேல் நீலலோசனியம்மாளை ஏமாற்ற முடியாது என்ற விஷயமும் அவளது மனதிற்கு நிச்சயமாகப் பட்டுவிட்டது. அவள் கடைசியாக நீலலோசனியம்மாளை நோக்கி, "ஒகோ! அப்படியா சங்கதி! மாசிலாமணிப் பிள்ளை எல்லாச் சொத்தையும் தம் பேரில் எழுதிக் கொள்ளப் போகிறாரோ! சரிதான் சரிதான். இப்போது தான் உண்மை தெரிந்தது. அவர் வக்கீலுக்கு என்ன எழுதி இருக்கிறார்? என்னையும் பக்கிரியா பிள்ளையையும் சம்பந்தப்படுத்தி கடிதத்தில் ஏதாவது தாறுமாறாக எழுதி இருக்கிறாரோ என்னவோ! இப்படி எல்லாம் அவர் வக்கீலிடமும் மற்றவரிடமும் தாறுமாறாக என்னைப்பற்றி அவதூறாகப் பேசும்படி செய்தது நீங்கள் அல்லவா?" என்று கூறுனாள். r அதைக் கேட்ட நீலலோசனியம்மாள் நிரம்பவும் சமாதானமாகப் பேசத் தொடங்கி, "அம்மா! கோபித்துக் கொள்ளாதே. மாசிலாமணிப் பிள்ளை வக்கீலுக்கு எழுதிய கடிதம் இதோ