பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 151 அதைக் கேட்ட நீலலோசனியம்மாள் தனது கைகளைப் பிசைந்து கொண்டு தவித்து, " அவ்வளவாகக் கவனிக்கவில்லை; அதை நாங்கள் கையால் துரைகளே! நாங்கள் அதை தொடக் கூட இல்லை" என்றாள். பெரிய டாக்டர், "அடெ பயித்தியமே! நீங்கள் பார்க்காவிட்டால் என்ன, அல்லது, அதைத் தொடாவிட்டால் என்ன? நீங்கள் பேசிய தெல்லாம் அதற்குள் பதிந்து போயிருக்குமே என்றல்லவா நான் கவலைப்படுகிறேன்" என்று கூறினார். நீலலோசனியம்மாள், "ஐயா! நாங்கள் எங்களுடைய குடும்ப ரகசியங்களை எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். அவைகள் எல் லாம் பதிந்து போயிருக்கின்றனவா என்று பாருங்கள்" என்றாள். உடனே துரை ஜன்னலின் மேல் வைக்கப்பட்டிருந்த கிராமபோன் மிஷினண்டை போய் அதை முடுக்கிவிட்டார். உடனே அது பேச ஆரம்பித்தது. முதலில் ரமாமணியம்மாள், "நீங்கள் கும்பகோணத்திற்கே போகவில்லையா? போலீசார் உங்களைத் தடுத்து விட்டார்களா?" என்று ஆரம்பித்த கேள்வியும் அதன் பிறகு அவர்களுக்குள் நடந்த சம்பாஷணைகளும், முடிவில் ரமாமணியம்மாள் மாசிலாமணியின் குற்றங்களை வெளியிட்ட தும் ஆகிய விவரங்களை யாவும் ஒன்று பாக்கியில்லாமல் கணிர் கணி என்று அதற்குள் இருந்து அப்படியே வெளியில் வந்தன. அதற்குள்ளிருந்து விபரீதமான விஷயங்களைக் கேட்ட பெரிய டாக்டர், இரண்டாவது டாக்டர் ஆகிய இருவரும் முற்றிலும் பிரமிப்ப டைந்து மூக்கில் விரலை வைத்து அப்படியே ஸ்தம்பித்து நின்றனர். நீலலோசனியம்மாள் தனது கைகளைப் பிசைந்து கொண்டு நிரம்பவும் தவித்துத் தத்தளித்து நடுநடுங்கி, "துரைகளே! இது மறைவான இடம் என்று நினைத்து நாங்கள் இங்கே வந்து எங்களுடைய குடும்ப விஷயங்களைப் பேசிவிட்டோம். இந்த மோசக்கார யந்திரம் அதை அப்படியே பிடித்து வைத்துக் கொண்டு பாடம் ஒப்புவிக்கிறதே! ஐயா! இந்த விஷயங்கள் வேறே யாருக்கும் தெரியக்கூடாது. இந்த விஷயங்கள் பதிந்திருக்கும் ஒரு தகட்டை மாத்திரம் தயவு செய்து உடைத்துப் போட்டு விடுங்கள். அதன் கிரயத்தை நான் கொடுத்து விடுகிறேன்" என்றாள்.