பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 153 களிடம் ஒருநாளும் போய்ச் சேராது" என்று கூறிய பின் அவ்விடத்தை விட்டு வெளியில் போய்விட்டாள். ★ ★ ★ அதே காலத்தில் இடும்பன் சேர்வைகாரன் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதை நாம் சிறிது கவனிப்போம். அன்றைய தினம் காலையில் கும்பகோணத்திலிருந்து மாசிலாமணி எப்படியும் வந்து சேருவான் அல்லது பணத்தையாவது அனுப்பி வைப்பான் என்று அவன் நிச்சயமாக எதிர்பார்த்து ஆவலே வடிவாக இருந்து நிமிஷத்திற்கு நிமிஷம் வேதனை அடைந்து கொண்டிருந்தான். தனது ஆட்கள் வெள்ளிக்கிழமை இரவு, தான் கூறியபடி வேலாயுதம் பிள்ளை வீட்டாரை அங்கஹரீனப் படுத்தி விட்டார்கள் என்றே அவன் நினைத்திருந்தவன் ஆதலால், அந்த விஷயம் மாசிலாமணிக்கு மிகுந்த திருப்தியையும் களிப்பையும் அளித்திருக்கும் என்றும், மாசிலாமணி தன்னை எப்படியும் கைவிடாமல் காப்பாற்றுவான் என்றும் அவன் உறுதியாக எண்ணி இருந்தான். வியாழக்கிழமை காலை ஆறு மணிக்கு ரயில் வண்டி எழும்பூருக்கு வருகிறதாகையால், காலை எட்டு, அல்லது, ஒன்பது மணிக்குள் தான் ஏதாவது நல்ல செய்தியைக் கேட்கலாம் என்று அவன் ஆவலோடு எதிர்பார்த்து எப்போது மணி ஆகும் ஆகும் என்று பதைபதைத்திருந்தான். காலை எட்டுமணி, ஒன்பதுமணி, பத்துமணியும் ஆயிற்று. எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. ஆகவே இடும்பன் சேர்வைகாரன் நெருப்புத் தணல்களின் மேல் நிற்பவன் போலத் தத்தளித்து இருக்கை கொள்ளாமல் சஞ்சலக் கடலில் ஆழ்ந்திருந்த சமயத்தில், அவன் இருந்த சிறைச்சாலையின் கதவு திறக்கப்பட்டது. இரண்டு ஜெவான்கள் உள்ளே வந்து, "சேர்வைகாரரே! போலிஸ் ஸ்டேஷனில் விசாரணை நடக்கிறது. சப் இன்ஸ்பெக்டர் உம்மை அழைத்துவரச் சொன்னார். எழுந்து வாரும்" என்றனர். உடனே இடும்பன் சேர்வைகாரனது மனம் பொங்கி எழுந்தது. கும்பகோணத்தில் இருந்து உதவி வந்திருப்பத னால் தான், தன்னை விடுவிப்பதற்காக சப் இன்ஸ்பெக்டர் தன்னை அழைத்துவர ஆட்களை அனுப்பி இருக்கிறார் என்று அவன் தனக்குள் எண்ணிக் கொண்டான். மனங் கொள்ளாத