பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 169 சொரிந்து தேம்பித் தேம்பி அழுதனர். சிவக்கொழுந்தம்மாள் முதலியோர் முறையே திரிபுரசுந்தரி யம்மாளையும், வடிவாம் பாளையும் ஆசையோடு கட்டித் தழுவிக் கோவெனக் கதறி அழுது கண்ணிரை ஆறாய் ஒடவிட்டு சமாசாரப் பத்திரிகையில் வெளியான விபரீதச் செய்தி பொய்யாய்ப் போனதைப் பற்றி தெய்வங்களை எல்லாம் பலவாறு ஸ்தோத்திரம் செய்யலாயினர். கந்தசாமி காணாமல் போன விவரம் முழுதையும் அவர்கள் திரிபுர சுந்தரியம்மாளிடம் தெரிந்து கொண்டு அதைக் குறித்து மிகுந்த விசனமடைந்ததன்றி, எப்படியும் தெய்வத்தின் கருணையால் கந்தசாமி கூடிய சீக்கிரம் வந்து சேர்ந்து விடுவான் என்று அந்த அம்மாளுக்கு ஆறுதல் கூறினர். ஆண் பெண் பாலரான அத்தனை விருந்தினர்களும் தாம் எதிர்பாரா வகையில் தமது பங்களாவிற்கு வந்ததைப் பற்றி கலெக்டர் பட்டாபிராம பிள்ளை அளவற்ற மனவெழுச்சியும் பூரிப்பும் அடைந்து, அந்தரங்க அன்போடும் உவப்போடும் அவர்கள் எல்லோரையும் உபசரித்து வரவேற்று அந்த பங்களாவை அவர்கள் தங்களது சொந்த கிரகம் போல மதித்து எவ்வித கிலேசமுமின்றி எதேச்சையாக இருக்குமாறு கூறி வேண்டிக் கொண்டதன்றி, கண்ணப்பாவையும் தனிமையில் அழைத்து, வந்திருந்த விருந்தாளிகள் எல்லோருக்கும் ராஜோப சாரம் செய்து கொடுக்கும்படி வேண்டிக் கொண்டார். அதுவுமன்றி, வந்திருந்த விருந்தினர் இன்னின்னார் என்பதையும் பட்டாபிராம பிள்ளை கேட்டுணர்ந்து அவர்கள் ஒவ்வொருவரோடும் நேரில் பேசிப் பரிச்சயம் செய்து கொண்டார். பெருத்த மிராசுதார்களும் கோடீஸ்வரர்களும் வர்த்தகர்களுமான அத்தனை விருந்தாளிகளும் வேலாயுதம் பிள்ளையின் நெருங்கிய பந்துக்கள் என்பதையும், அவர்கள் எல்லோரும் அந்த அபாயச் செய்தியைக் கேட்டு சகியாத வர்களாய் தொலை தூரத்தில் உள்ள மன்னார்குடியில் இருந்து உடனே புறப்பட்டு சென்னப்பட்டணத்திற்கு வந்ததையும் கண்டு, தமது புதிய சம்பந்தியான வேலாயுதம் பிள்ளையின் மேம்பாடும் கண்ணியமும் அவரிடம் மற்றவர் வைத்திருந்த மதிப்பும் இவ்வள வென்று சொல்லி முடியாததென்று பட்டாபிராம பிள்ளை உணர்ந்து கொண்டதன்றி, அத்தகைய சிரேஷ்டமான மனிதர் களின் சம்பந்தம் தமக்கு வாய்க்கப் போவதைக் கருதி உவகை