பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 மாயா விநோதப் பரதேசி பூத்து உணர்வு கலங்கிப் பரவசமடைந்து, தாம் இன்னது பேசுகிறோம் என்பதையே அறியாதவராய் மெய்ம்மறந்து அங்கு மிங்கும் ஒடியோடி அன்பும் உபசாரமுமே வடிவெடுத்து வந்தது போலக் காணப்பட்டார். அது போலவே, வந்திருந்த விருந்தாளிகள் அனைவரும் பட்டாபிராம பிள்ளையின் மேம்பாடுகளையும் இனிய குணங்களையும் அவரது அபாரசம்பத்தையும் பெருத்த செல்வாக்கையும் கண்டு சட்டிலடங்காப் பெருங்களிப்பும் ஆனந்தமும் அடைந்தவர்களாய்த் தத்தம் விருப்பப்படி தமது ஸ்நானபான அனுஷ்டானங்களை எல்லாம் செய்து கொண்டு யதேச்சையாக அந்த பங்களாவில் இருக்கத் தொடங்கினர். கந்தசாமி பெண் வேஷந் தரித்து வந்து, முரடர்களால் அபகரிக்கப் பட்டு போனவற்றை எல்லாம் விருந்தினர்கள் கண்ணப்பாவினிடம் தனிமையில் தெரிந்து கொண்டனர் ஆதலால், அதைக் குறித்து அவர்கள் மிகுந்த வியப்பும் விசனமும் அடைந்தவர்களாய்க் காணப்பட்டு அன்றைய தினம் நடந்த மூன்றாவது நாள் பூஜையில் கலந்து கொண்டு, முந்திய தினங்களில் நடந்ததைவிட அது பன்மடங்கு சோபிக்கும்படி செய்தனர். அன்று காலை முதல் அவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு வேளையிலும் மகா சிரேஷ்டமான விருந்துண்ணுவதற்குத் தக்கபடி பட்டாபிராம பிள்ளையும் கண்ணப்பாவும் ஒன்றுகூடி அபாரமான ஏற்பாடு களையும் முஸ்தீபுகளையும் செய்திருந்தனர். அன்றைய தினமாவது வேலாயுதம் பிள்ளை தங்களோடு உட்கார்ந்து அவசியம் பந்திபோஜனம் செய்ய வேண்டும் என்று சுந்தரம் பிள்ளை முதலியோர் வருந்தி வேண்டிக்கொள்ள, அதை அசட்டை செய்ய மாட்டாதவராய் வேலாயுதம் பிள்ளை அன்றைய தினம் இரவில் சொற்பமாக போஜனம் செய்து கொண்டார். எல்லோரும் உட்கார்ந்து தாம்பூலம் தரித்துக் கொண்டபடி மேலே நடக்க வேண்டியதைக் குறித்து ஆலோசனை செய்யத் தொடங்கினர். இந்த ராஜதானியிலுள்ள போலீசார் எல்லோரும் கந்தசாமியைக் கண்டு பிடிப்பதற்குத் தம்மாலேன்ற வரையில் முயன்று பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், தாம் போய்த் தேடுவதற்கு ஒர் இடமும் பாக்கி இல்லை என்றும் பட்டாபிராம பிள்ளை கூறியதைக் கேட்ட மற்ற எல்லோரும் வாட்டமும்,