பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 மாயா விநோதப் பரதேசி கணக்கான ஜனங்களும் நமக்காக பகவானை ஸ்தோத்திரம் செய்தால், அப்போதாவது கடவுளின் மனம் கனியாதா? அத்தனை ஜனங்களில் புண்ணியாத்மாக்கள் எத்தனையோ பேர் இருப்பார் கள், அவர்களுடைய பிரார்த்தனை பலன் தராமல் ஒருநாளும் வீணாகாது; போலீசார் மனிதப் பிரயத்தனங்களைச் செய்யட்டும்; நாம் தெய்வப் பிரார்த்தனையை நடத்துவோம். நாளைய தினம் முதல் நம்முடைய பிள்ளையாண்டான் அகப்படுகிற தினம் வரையில் இந்தப் பூஜை தான தருமம் முதலியவற்றை எல்லாம் நடத்தும் திருப்பணியை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். ஒரு நாளைக்குக் குறைந்தது பதினாயிரம் ரூபாய் வீதமாவது செலவு செய்ய வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அண்ணா இந்த என்னுடைய அவாவை நான் நிறைவேற்றி வைக்க உத்தரவு கொடுக்க வேண்டும்" என்று வேலாயுதம் பிள்ளையை நோக்கிக் கூறினார். அதைக் கேட்ட வேலாயுதம் பிள்ளை மறுமொழி கூறுவதற்கு முன் மற்ற சில விருந்தினரும் உடனே பேசத் தொடங்கி, "எங்களுடைய அபிப்பிராயமும் அதே மாதிரியாக இருக்கிறது. ஆனால், எல்லாத் தினங்களிலும் சுந்தரம் பிள்ளை அவர்கள் பணச் செலவு செய்வதென்றால் அது இவ்விடம் கூடியுள்ள மற்ற தனவந்தர்களுடைய மனசுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. ஆகையால், ஒவ்வொரு நாளைய மண்டகப்படியை ஒவ்வொருவர் நடத்த வேண்டும் என்று அண்ணன் அனுமதிக்க வேண்டும்" என்று நிரம்பவும் வணக்கமாகக் கூறினர். உடனே வேலாயுதம் பிள்ளை மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கி, "இப்போது முக்கியமாக நாம் தெய்வ பூஜை அதிதிபூஜை ஆகிய காரியங்களை நடத்த வேண்டும் என்பதைப் பற்றி எல்லோரும் ஒரே மனசாய் இருக்கிறோம். அப்படியே அதை நடத்துவோம். பணச் செலவு செய்வதைப் பற்றி இப்போது நாம் ஏன் வாத தர்க்கங்கள் செய்ய வேண்டும். யார் பணம் போட்டால் என்ன? எல்லாரிடத்தில் இருக்கும் சொத்தும் கடவுளுடைய உடமை. எல்லாம் அவருடைய சிருஷ்டிப் பொருளே. கடவுளுக்கும், தான தருமங்களுக்கும் பணச் செலவு செய்வதற்கு ஒரு வரம்பும் உண்டா? அதைச் செய்கிறவர்களைத் தடுப்பதைப் போன்ற மகா பாதகமான காரியம் வேறு எதுவுமில்லை. ஆகையால், யார்