பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 மாயாவிநோதப் பரதேசி அப்போதாவது உங்கள் மனம் இரங்கி என்னை கூடிமிக்குமா? என் உயிர் இருக்கும் போதே, உங்கள் முகதரிசனம் எனக்குக் கிடைக்கப் போகிறதா ஆகா! நீங்கள் பெண் வேஷந்தரித்து வந்தீர்க்ளே! உங்கள் விரலின் அழகுக்கு அந்த ரதிதேவியின் அழகுகூட ஈடாகும் என்று சொல்ல முடியுமா. ஐயோ! மறுபடி நான் உங்களை அதே பெண் வேஷத்தில் பார்க்கப் போகிறேனா என்னைப் போன்ற பாக்கியவதியும் இந்த உலகத்தில் இருக்க மாட்டாள்; அதுபோலவே துர்ப்பாக்கியவதியும் இருக்க மாட்டாள். எவருக்கும் கிடைக்கச் சாத்தியமற்ற மகா சிரேஷ்டமான பொருளை எனக்குக் காட்டிக் கடவுள் உடனே மறைத்துவிட்டாரே! ஆகா! நான் இனி என்ன செய்யப் போகிறேன்! என்னுடைய நிலைமை இருப்பதைப் பார்த்தால், அதிக நாள் இந்த உயிர் நிற்காது போலிருக்கிறது. அதற்குள் உங்களைப் பார்க்கப் போகிறேனா? ஆகா! உங்களுடைய பெண் வடிவத்திற்கு ஒரு படமாவது பிடித்து வைத்துக் கொண்டேனா ஐயோ, பாவி! பாவி! நான் மகா பாவி!" என்று கூறி மேலும் பலவாறு பிதற்றத் தலைப்பட்டாள். மூடப் பட்டிருந்த அவளது கண்களில் இருந்து கண்ணிர் பெருகி மாலை மாலையாய் வழிந்தது. அதைக் கண்ட வடிவாம்பாள் பதறிப் போய், அவளை அன்போடு எடுத்துத் தனது மார்பில் சாத்திக் கொண்டு கண்ணிரைத் துடைத்து விட்டு, "அம்மா மனோன்மணி மனோன்மணி விழித்துக்கொள். பூஜை நடக்கும் நேரமாகிறது. அழைக்க மனிதர்கள் வந்துவிடுவார்கள். நீ புடவையை மாற்றிக் கொள்ள வேண்டாமா?" என்று முற்றிலும் தணிவாகக் கூறி அவளது கன்னங்களையும் முகத்தையும் தடவிக் கொடுத்தாள். உடனே விழித்துக் கொண்ட மனோன்மணியம்மாள் வடிவாம் பாளை நோக்கி, "ஐயோ! அக்கா நான் சாக வழி பார்க்கிறேன். என் பிராணன் இந்த உடம்பில் இனி அதிக காலம் நிற்கப் போகிற தில்லை. எனக்காக நீ இராப்பகல் சலிப்பின்றி பெற்ற தாயைவிட ஆயிரம் மடங்கு விசேஷமான வாஞ்சையோடு எவ்வளவோ பாடு பட்டு எனக்குச் செய்யும் உபசரணைகளுக்கு நான் உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்! அல்லது, என் நன்றியறிதலை செய்கைகளில் காட்ட நான் அதிக காலம் உயிரோடு தான் இருக்கப் போகிறேனா, அதுவுமில்லை. அக்கா இந்த வேதனையை