பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 201 பக்கத்தில் சுமங்கலிப் பிரார்த்தனைக்காகத் தருவிக்கப் பட்டிருந்த சுமங்கலி ஸ்திரிகளுள் ஒருத்திக்கு ஆவேசம் வந்துவிட்ட தென்பது தெரிந்தது. அவள் பிரக்ஞையற்றுக் கண்களை மூடிக் கொண்டு தனது கைகளையும், உடம்பையும் தாறுமாறாக முறுக்கிக் கொண்டாள். அவளது உடம்பு கிடுகிடுவென்று ஆடவாரம் பித்தது, அவள் மீது சுவாமி வந்துவிட்ட தென்பதை உடனே கண்டு கொண்ட ஜனங்கள் அப்பால் நகர்ந்து அவளைச் சுற்றிலும் இடம் உண்டாக்கி விட்டனர். வேலாயுதம் பிள்ளை முதலியோரின் உரோமம் சிலிர்த்தது. அவர்கள் கட்டிலடங்கா மனவெழுச்சியும் பூரிப்பும் அடைந்து முன்னிலும் அதிகரித்த பக்திப் பெருக்கைக் காட்டிக் கைகுவித்த வண்ணம் நின்று, அந்தப் பெண் பிள்ளை என்ன சொல்வாளோ என்று மிகுந்த ஆவலோடு அவளது வாயையே பார்த்திருந்தனர். அது வரையில் கண்களை மூடி அயர்ந்து தளர்ந்து நின்ற மனோன்மணியம்மாள் திடுக்கிட்டு விழித்து அது என்னவென்று கவனித்தாள். அப்போது அந்த ஸ்திரீ மறுபடியும் பிரமாதமாகத் கூச்சலிடத் தொடங்கி, "அடேய் வேலாயுதம்! அடேய் வேலாயுதம்! உன்னுடைய உண்மையான பக்தியையும், நீயும் மற்றவரும் சேர்ந்து செய்யும் பூஜையையும் தான தருமங்களையும் கண்டு நாம் சந்தோஷமடைந்தோம். அந்தக் காலத்தில் நம் பொருட்டு தன் கண்களைத் தோண்டி எடுத்து வைத்த நம் கண்ணப்பனுடைய பக்தியைவிட உன் பக்தி பன்மடங்கு மேலானதாய் இருப்பதைக் காணக் களிகொண்டோம். குழந்தாய்! பயப்படாதே; உன் கவலை வெகு சீக்கிரம் நீங்கிப் போகும். பையனுக்கு இது கொஞ்சம் கெடுதலான காலம். அவனுக்குப் பிராணாபாயம் நேர வேண்டிய சமயம் இது. அதனாலேயே, மகா புத்திசாலியும் கண்ணியவானுமான அவன் பெண் வேஷம் போட்டுக் கொள்ள நேர்ந்தது. அவன் உங்கள் விரோதியின் கையில் அகப்பட்டு, அவர்களிடத்திலிருந்து நிரம்பவும் தந்திரமாகத் தப்பித்துக் கொண்டு வேறிடத்திற்குப் போய் இருந்து வருகிறான். தடுக்க முடியாத சில இடையூறு களினால், அவன் தன்னைப் பற்றிய சங்கதியை மற்றவருக்குத் தெரிவிக்க மாட்டாமலும் உங்களிடம் வரமாட்டாமலும் இருக்கிறான். இன்னும் நான்கு தினங்களில் பையன் கேஷமமாய்