பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 203 பெருவிம்மித முற்றுத் தம்மை மறந்து இன்ப மயமாய் நின்றனர். அவ்வாறு தெய்வம் மனிதர் மீது தோன்றுவதை அதுகாறும் கண்டறியாத மனோன்மணியம்மாள் அப்படியே ஸ்தம்பித்துக் கல்லாய்ச் சமைந்து போனாள். தனது மனநிலைமையை யாரோ ஒர் அன்னிய மனுவி உள்ளபடி அறிந்து எப்படி வெளியிட முடிந்ததென்ற வியப்பும் திகைப்பும் அவளால் தாங்க இயலாதன வாக இருந்தன. ஆயினும் கந்தசாமி நான்கு தினங்களில் வந்து சேருவான் என்ற நற்செய்தி தேவாமிருதம் பருகியது போல அவளது மனத்தில் புகுந்து அவளது தேகத்திற்கும் மனத்திற்கும் ஒரு யானையின் பலத்தைக் கொடுத்து அவளைப் புது மனுவி யாக்கியது. அதுவுமன்றி அன்றைய தினமே தனக்கு வேறே ஏதோ நற்செய்தி வரப் போகிறதென்றும் தெய்வ வாக்கு ஏற்பட்டதை நினைத்து நினைத்து அவள் குதூகலமும் பூரிப்பும் அடைந்து அதைப் பற்றி ஆவல் கொள்ளத் தொடங்கினாள். அதன் பிறகு வேலாயுதம் பிள்ளை தமது அன்றைய பூஜையை அவ்வளவோடு பூர்த்தி செய்து, எல்லோருக்கும் பிரசாதம் வழங்க, ஜனக்கும்பல் கலைந்தது. மனோன்மணியம்மாள் முதலிய எல்லோரும் விபூதி, பழங்கள் முதலியவை பெற்றுக் கொண்டனர். மனோன்மணியம்மாள் நிற்க மாட்டாதவளாய்த் தத்தளிக்கிறாள் என்பதைக் கண்ட வடிவாம்பாள் வேலைக்காரிகளைச் சேர்த்துக் கொண்டு அவளை முன் போலவே ஜாக்கிரதையாக அழைத்துக் கொண்டு போய், அவளது சயனத்தில் விடுத்தபின், வேலைக்காரி களை அப்பால் அனுப்பி விட்டு, "அம்மா! மனோன்மணி! பார்த்தாயா சுவாமியின் செயலை! நான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு சொன்னபடியே காரியம் முடிந்தது எப்படி இருக்கிறது! கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற வாக்கு சாதாரணமான வாக்கா! அம்மா! இனியாவது நீ உன் மனக்கவலை விட்டு வேளா வேளைக்குக் கொஞ்சம் சாப்பிட்டு உன் உடம்பு கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்று நீ நன்றாக போஜனம் செய்ய வேண்டும்" என்றாள். பூஜை மண்டபத்திற்குப் போய் வந்த அலுப்பும், அவ்விடத்தில் நின்ற அலுப்பும் தோன்றி வதைத்தமையால், மனோன்மணியம்