பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 19 ஆவன்னா கூட அறியாத சுத்த மெளடீகமே வடிவாய் இருக்கும் வடிவாம்பாள், திரிபுரசுந்தரி யம்மாள் முதலியோருக்கு நான் அடங்கி அவர்கள் சொல்லுகிறபடி கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டிய நிலைமையை என் தகப்பனார் எனக்கு உண்டாக்கிக் கொடுக்க முயற்சி செய்கிறாரே. நான் இது வரையில் கட்டி வந்த மஸ்லின் ஆடைகளை நான் இவர்களுக்கு பயந்து விலக்கிவிட்டு, நிரம்பவும் கனமாகவும் படாடோபமாகவும் இருக்கும் பட்டுப் புடவைகளைக் கட்ட வேண்டுமாம். இல்லாவிட்டால், என்னை எல்லோரும் தாசிப் பெண் என்பார்கள். ஆண்பிள்ளைகளைக் கண்டால் பிளேக், காலரா முதலிய பயங்கரமான தொற்று வியாதிகளைக் கண்டு, மனிதர் அஞ்சி நடுங்கி விலகுவது போல, அப்பால் போய் ஒளிந்து கொள்ள வேண்டும். ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகள் ஆகிய எவரிடத்திலும் நான் வாயைத் திறந்து பேசாமல் மெளன விரதம் பூண்டு கொள்ள வேண்டும். அவர்களுக் கெதிரில் நான் உட்காரக் கூடாது. அவர்கள் போடும் சாப்பாட்டை நான் சாப்பிட வேண்டும். சே! இது கேவலம் அடிமைத்தனமே அன்றி ഖേജ്ഞ. சுயமதிப்பு, கண்ணியம், சுயேச்சை முதலிய அரும்பெரும் விஷயங்களை எல்லாம் நான் கற்கும்படி ஏற்பாடு செய்த என் தந்தை அவைகளை எல்லாம் விட்டு அவற்றிற்கு மாறான வாழ்க்கையை நான் ஏற்று என் ஆயிசு கால பரியந்தம் பாழ்நரகில் கிடந்து உழலுவதற்கல்லவா வழி தேடுகிறார். சே! என்ன கலியாணம் வேண்டியிருக்கிறது. இதை சுபகாரியம் என்று சொல் வதைவிட அசுபகாரியம் என்றே மதிக்க வேண்டும். ஒரு நாளும் நான் என் மனதார இந்தக் கலியாணத்திற்கு இணங்கப் போகிறதில்லை. என் தகப்பனார் இருக்கும் இருப்பைப் பார்த்தால், அவர் இந்த விஷயத்தில் ஒரே பிடிவாதமாக இருப்பார் போலத் தோன்றுகிறது. இருந்தாலும் நான் என்னால் கூடிய வரையில் அவருக்குச் சொல்லிப்பார்க்கிறேன். அவர் என் விருப்பத்தை அலட்சியம் செய்து என்னை அதே இடத்தில் கட்டிக் கொடுக்க எத்தனித்தால், நான் உடனே மெத்தையில் இருந்து கீழே விழுந்து உயிரை விட்டுவிடுகிறேன். அதுதான் நான் செய்யக்கூடிய காரியம்" என்று மனோன்மணியம்மாள் பலவிதமாக எண்ணமிட்டு மன்னார் குடியாரது சம்பந்தம் தனக்கு உதவாது என்ற விபரீதமான