பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 213 ஒளிந்து கொண்டிருக்கிறாரோ என்று சோதனை போட்டுப் பார்த்த காலத்தில், அவர் சிறைச்சாலையில் இருப்பதே உமக்கு அனு கூலமான தென்று நீர் சொன்னி அல்லவா? அதுவுமன்றி, உம் முடைய அண்ணனைப் பிடித்துக் கொடுப்பவருக்குநாங்கள் ஐயாயிரம் ரூபாய் வெகுமதி கொடுப்பதாக வெளியிட்டபோது, நீர் அதற்கு இரட்டிப்புத் தொகை வெகுமதி கொடுப்பதாக ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்தீரல்லவா?" என்றார். மாசிலாமணி, "ஓ! அதைப்பற்றி சந்தேகமென்ன? அதை இப்பொழுதும் சொல்லி உறுதிப்படுத்துகிறேன்" என்று அழுத்த மாகக் கூறினான். அண்ணாவையங்கார், "சரி: சந்தோஷம்; எனக்குப் பட்டணத்தில் இருந்து ஒர் அவசர உத்தரவு வந்திருக்கிறது. உம்முடைய தமையனார் ஒளிந்திருந்த இடத்தை யாரோ ஒருவர் காட்டி விட்டாராம். உம்முடைய தமயனாரைப் பிடித்துக் கொண்டு போய்த் தஞ்சாவூரில் வைத்திருக்கிறார்களாம்" என்றார். மாசிலாமணி, "ஒகோ! அப்படியா அது நிரம்பவும் சந்தோஷ கரமான செய்திதான்" என்றான். அண்ணாவையங்கார், "அதைச் சொல்லி என் நண்பரான உம்மை உடனே சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற அவசரத்தி னால்தான், நான் உம்முடைய சந்தர்ப்பத்தை அறிந்து கொள்ளாமல் வந்து விட்டேன். அந்த உத்தரவில் இன்னம் இரண்டொரு விஷயங்களும் காணப்படுகின்றன. இன்று வெள்ளிக்கிழமை அல்லவா இந்த வழக்கை தஞ்சாவூரில் உள்ள ஜில்லா ஜட்ஜி துரையே திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டு முடிவு செய்ய வேண்டும் என்றும், உம்முடைய தமயனாரைக் காட்டிக் கொடுத்தவருக்கு அந்த ஜட்ஜி துரை அப்போதே பதினை யாயிரம் ரூபாய் சன்மானம் கொடுக்க வேண்டும் என்றும், அதில் நீர் கொடுப்பதாகச் சொன்ன பதினாயிரம் ரூபாயோடு உம்மை வரவழைத்து ஆயத்தமாய் வைக்க வேண்டும் என்றும், உத்தரவு வந்திருக்கிறது" என்றார். - மாசிலாமணி, "ஒஹோ! அப்படியா! நான் சொன்னபடி பதினாயிரம் ரூபாயை அன்றைய தினமே மூட்டையாகக் கட்டித்