பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 219 இருந்த கைதிக் கூண்டில் நிறுத்தினார்கள். அந்த மூன்று கைதிகளுள் இருவர் கால் சட்டை, மேல் சட்டை, குல்லா முதலிய உடைகள் தரித்த துருக்கர்களாய்க் காணப்பட்டனர். இன்னொருவர் உயரமாக வளர்ந்தவராயும் சுமார் இருபத்தைந்து வயதடைந்தவராயும் காணப்பட்டார். மூன்றாவது கைதி ஒரு துருக்க கோஷா ஸ்திரீ ஆதலால், அவள் தலை முதல் கால் வரையில் துப்பட்டியால் தன்னை மூடிக்கொண்டிருந்தாள். முகத்தில் கண்களுக்கு மாத்திரம் இரண்டு துளைகள் விடப்பட்டிருந்தன. அந்த ஸ்திரீயின் சிவந்த பாதங்களும் அவற்றில் காணப்பட்ட கொலுசுகள் பாதசரம் முதலிய வைகளும் வெளிக்குத் தெரிந்தன. அவற்றிலிருந்து, துப்பட்டியின் உயரம் பருமன் முதலியவற்றிலிருந்தும், அதற்குள் இருந்தது கொடி போல இருந்த நல்ல யெளவனப் பருவத்து ஸ்திரீ என்பது ஒருவாறு யூகிக்கக் கூடியதாக இருந்தது. அவர்கள் மூவரையும் கண்ட ஜனங்களும் வக்கீல்களும் அந்தக் கைதிகள் வேறே ஏதோ வழக்கிற்கு சம்பந்தப்பட்டவர்கள் என்று எண்ணிக் கொண்டு, சட்ட்ைநாத பிள்ளை ஏன் வரவில்லை என்று அப்போதும் வழியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். உடனே ஜட்ஜி துரை தமக்கு முன்னால் வக்கீல்களின் இடையில் சிறிய வடிவத்தோடு குழந்தை போல உட்கார்ந்திருந்த மிளகு குடுக்கை ராயரைப் பார்த்து, "சர்க்கார் தரப்பில் மிஸ்டர் அண்ணாஜி ராவ் இந்த வழக்கை நடத்தப் போகிறார் என்பது தெரிகிறது" என்றார். உடனே அவருக்கெதிரில் உட்கார்ந்திருந்த பாரிஸ்டர் சிவ சிதம்பரம் பிள்ளை தமது விலாசம் அச்சடித்த ஒரு கார்டை ஜட்ஜியின் மேஜையில் வைத்துவிட்டு, தாம் எதிரிகளுக்காக ஆஜராவதாய்த் தெரிவித்துவிட்டுக் கீழே உட்கார்ந்து கொண்டார். உடனே ஜட்ஜி ராயரைப் பார்த்து, "சரி; கைதிகள் வந்து விட்டார்கள் அல்லவா. விசாரணையைத் தொடங்குவோம்" என்றார். அதைக் கேட்டவுடனே ராயர் அம்பு பாய்வது போலச் சடேலென்று எழுந்து நிரம்பவும் அலட்சியமாகவும் கம்பீரமாகவும் நின்று கணிர் கணி என்று பேசத் தொடங்கினார். கைதிகள் வந்து விட்டார்கள் என்று ஜட்ஜி துரை சொன்னதைக் கேட்டும், ராயர் பேச ஆரம்பித்ததைக் கண்டும் வக்கீல்களும் ஜனங்களும் பிரமிப்படைந்தனர். சிலர், "யாரோ