பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 225 தான் சட்டைநாத பிள்ளை என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர் எண்ணெய்க் குடத்தைப் போட்டபின் விலங்கையும் ஜெயில் உடையையும் விலக்கியவுடன் எங்கெங்கே போனாரோ, அங்கெல்லாம் நீங்கள் போய், அவர் துலுக்கர் உடை தரித்து லப்பைத் தெருவில் இருந்த வரையில் கூடவே இருந்து பார்த்திருந் தாலன்றி, எண்ணெய்க் குடம் தூக்கியபடி அங்கே இருந்த சட்டை நாத பிள்ளை தான் இப்படி சாயப்புவாக மாறி இருக்கிறார் என்று நீங்கள் சொல்ல முடியாதல்லவா? ஜெயிலர்:- ஆம், வாஸ்தவம் தான். சிறைச்சாலையில் இருந்த சட்டைநாத பிள்ளை தம் பழைய ஆடை முதலியவற்றை விலக்கி விட்டு இப்படி மாறியதை எல்லாம் நான் நேரில் பார்க்கவில்லை, இவர் அவரைப் போலவே இருக்கிறார் என்று தான் நான் சொல்ல முடியும் என்றார். அவ்வளவோடு தாம் கேள்வி கேட்பதை நிறுத்திக் கொள்வ தாகவும், மறுபடி தேவையானால் அவரைத் தருவித்து விசாரிக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் பாரிஸ்டர் கேட்டுக் கொள்ள, ஜட்ஜி அதற்கிணங்கினார். அவ்வளவோடு ஜெயிலர் வெளியில் அனுப்பப்பட்டார். பிறகு சட்டைநாதபிள்ளையோடு எண்ணெய் விற்றுக் கொண்டு போன ஜெயில் வார்டர்கள் இருவரும் ஒருவர்பின் ஒருவராக வந்து வாக்குமூலங் கொடுத்தனர். பத்திரிகையில் வந்த வரலாற்றையே அவர்கள் எடுத்துக் கூறினர். பிறகு இரண்டு கட்சிகளின் வக்கீல்களும் அதற்கு முன் வந்த ஜெயிலரிடம் கேட்டது போல ஒருவர் பின் ஒருவராய்க் கேள்வி கேட்க, கைதிக் கூண்டில் நின்ற இரண்டு ஆண்பிள்ளைகளுள் ஒருவர் சட்டைநாத பிள்ளையைப் போலவே இருக்கிறார் என்றும்; ஆனால், அவர் தான் சட்டைநாத பிள்ளை என்று தாம் நிச்சயமாய்க் கூற இயலாதென்றும் அந்த இரண்டு வார்டர்களும் வாக்குமூலம் கொடுத்தனர். பிறகு நான்காவது சாட்சியாக ஒரு வெள்ளைக்கார துரை விசாரிக்கப்பட்டார். அவர் மனிதரது கைவிரல் ரேகைகளைப் பரீட்சை செய்வதில் நிரம்பவும் தேர்ச்சி பெற்ற நிபுணர். அவர் unm.so.L.IIH-15