பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 மாயா விநோதப் பரதேசி சாட்சிக் கூண்டில் ஏறி நின்று கிறிஸ்துவ வேதத்தைத் தொட்டுப் பிரமாணம் செய்தார். சர்க்கார் வக்கீலான ராயர் அவரது வாயிலிருந்து அடியில் கண்ட விஷயங்களை வருவித்தார்: நான் கைவிரல் ரேகைகளைப் பரீட்சை செய்கிற உத்தியோகஸ் தன். எனக்கு துரைத்தனத்தார் மாதம் ரூபாய் 2500 சம்பளம் கொடுக்கிறார்கள். துரைத்தனத்தாருடைய உத்தரவின் மேல் நான் நேற்று இந்த ஊருக்கு வந்து சப் ஜெயிலுக்குப் போய், இதோ நிற்கும் மூன்று கைதிகளின் கைவிரல் ரேகைக் குறிகளை கருப்பு மையின் உதவியால் ஒரு காகிதத்தில் பதியவைக்கச் செய்து, அவைகளை வாங்கிக் கொண்டு போய் வைத்துக் கொண்டு, இதற்கு முன் தண்டனை அடைந்தவர்களுடைய கைவிரல் ரேகைக் குறிகளோடு ஒத்திட்டுப் பார்த்தேன். கைதிக் கூண்டில் நிற்பவர் களுள் இருவர் இதற்கு முன் தண்டனை அடைந்தவர்களாகத் தோன்றவில்லை. ஆண்பிள்ளை இருவருள் கொஞ்சம் குள்ளமாய் இருப்பவரின் கைவிரல் ரேகை இதற்கு இரண்டு வருஷ காலத்திற்கு முன் தண்டனை அடைந்து சிறைச்சாலைக்குப் போன சட்டைநாத பிள்ளை என்பவருடைய கைவிரல் ரேகை போலவே இருக்கிறது. இரண்டிற்குக் கொஞ்சமும் பேதமே இல்லை - என்று அவர் வாக்கு மூலம் கொடுத்தார். பாரிஸ்டர் சிவசிதம்பரம் பிள்ளை:- "ஐயா! ரேகை நிபுணரே! இதோ குள்ளமாய் இருக்கும் கைதியின் கைவிரல் ரேகை அடையாள மும் சட்டைநாத பிள்ளை என்ற ஒருவனுடைய கைவிரல் ரேகை அடையாளமும் ஒரே மாதிரியாய் இருப்பதாகச் சொன்னிகளே. முந்திய ரேகை அடையாளம் இந்தக் கைதியின் கைவிரலில் இருந்து எடுக்கப்பட்டது தான் என்று தங்கள் நிச்சயமாகச் சொல்ல முடியுமா?" ரேகை நிபுணர்:- இரண்டு ரேகைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன என்பதை மாத்திரம் நான் சொல்ல முடியுமே அன்றி, இவருடைய கையில் இருந்து தான் முந்திய அடையாளமும் எடுக்கப்பட்டிருக் கிறது என்பதை நான் எப்படிச் சொல்லுகிறது.