பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 மாயா விநோதப் பரதேசி ரேகை நிபுணர்:- இரட்டைக் குழந்தைகளின் விஷயம் பிரத்தியேக மானது. அவர்களுடைய ரேகை அடையாளம் ஒரே மாதிரியாக இருக்கவும் கூடும்; வித்தியாசப்படவும் கூடும். பாரிஸ்டர்:- நீங்கள் சோதனை செய்ததுண்டா என்றல்லவா கேட்கிறேன். ரேகை நிபுணர்: நான் பார்த்ததில்லை. இதற்கு முன் பார்த்திருக்கி றார்கள். சில ரேகைகள் ஒத்துக் கொண்டிருக்கின்றன. சில வித்தியாசமாக இருக்கின்றன. பாரிஸ்டர்- சரி; சில ஒத்துக் கொள்கின்றன அல்லவா. இப்போது இந்தப் பிரஸ்தாபக் கைதி இருக்கிறாரே இவருக்கு இப்போது தாய் தகப்பன்மார் இல்லை. இது போலவே சட்டைநாத பிள்ளை என்பவருடைய தாய் தகப்பன்மாரும் உயிரோடில்லை. சட்டை நாத பிள்ளையும், இந்தப் பிரஸ்தாபக் கைதியும் இரட்டைக் குழந்தைகளாய்ப் பிறந்திருந்து, இவர் குழந்தையாய் இருந்த போது யாராவது ஒரு முகம்மதியர் அந்தக் குழந்தைகளில் இவரை அபகரித்துக் கொண்டு போய்த் தமது சொந்தக் குழந்தை போல வளர்த்திருக்கக் கூடுமல்லவா. அப்படி இருக்க, இந்த இரண்டு ரேகைகளும் ஒத்துக் கொள்வதனாலேயே, இவர் தான் சட்டைநாத பிள்ளை என்று நீங்கள் நிச்சயப்படுத்த முடியுமா? ரேகை நிபுணர்:- அதை எல்லாம் சாட்சியத்தைக் கொண்டு நியாயாதிபதி நிர்ணயிக்க வேண்டுமேயன்றி, அதற்கெல்லாம் எங்கள் சாஸ்திரம் பயன்படாது. - பாரிஸ்டர்- நிரம்ப சந்தோஷம்; அதிருக்கட்டும். நான் இன்னம் ஒரு கேள்வி கேட்கிறேன். இரட்டைக் குழந்தைகளின் விஷயம் ஒருபுறம் இருக்கட்டும். மனிதருக்கு மனிதர் சிலர் ஒருவர் போல இன்னொருவர் இருப்பதாக ஜனங்கள் சொல்வதுண்டல்லவா? ரேகை நிபுணர்:- உண்டு. பாரிஸ்டர்- சரி, அந்த ஒற்றுமை எப்படி ஏற்படுகிறது? ஒரு வருடைய முகம், கை, கால், கண், காது, மூக்கு முதலிய சகலமான அவயவத்திலும் ஒன்றுக்கொன்று ஒற்றுமை இருப்பதினால் தானே மொத்தத் தோற்றத்தில் ஒற்றுமை ஏற்படுகிறது?