பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 229 ரேகை நிபுணர்:- அப்படித்தான் சொல்ல வேண்டும். பாரிஸ்டர்- அப்படி ஒவ்வோர் உறுப்பும் ஒத்துப் போகும் போது, கைவிரல் ரேகையும் ஒத்துத்தானே போகும்? ரேகை நிபுணர்:- ஆம். அநேகமாய் ஒத்துத்தான் போகும். பாரிஸ்டர்- அநேகமாய் என்று ஏன் சொல்லுகிறீர்கள்? ரேகை நிபுணர்:- ஒரு மனிதருடைய தோற்றமும், மற்றொரு மனி தருடைய தோற்றமும் அநேகமாய் ஒத்துக்கொள்ளுகிறபடியால், விரல் ரேகைகளும் அநேகமாய்த்தானே ஒத்துக்கொள்ளும். பாரிஸ்டர்:- அப்படியானால், மனித சிருஷ்டியில் ஒரு மனிதனைப் போலவே தத்ரூபம் இன்னொருவன் கொஞ்சமும் வித்தியாசம் இல்லாமல் இருக்க முடியாது என்று நாம் சொல்ல முடியுமா? கடவுள் சர்வ வல்லமையுடையவர் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்ளும் போது, கொஞ்சமும் பேதமில்லாத இரண்டு மனிதரை அவர் உலகத்தில் சிருஷ்டித்திருக்க முடியாது என்று நாம் சொல்ல முடியுமா? ரேகை நிபுணர். அதெல்லாம் பெரிய தத்துவங்கள். அதில் எல்லாம் எனக்கு அவ்வளவு திறமை போதாது. அதை எல்லாம் நியாயாதிபதிகள் நிர்ணயிக்க வேண்டும் - என்றார். பாரிஸ்டர்:- சரி; அப்படியானால், நான் உங்களுக்கு இனி தொந்தரவு கொடுக்கவில்லை - என்றார். அதோடு அவரது விசாரணை முடிந்தது. அவர் வெளியில் அனுப்பப்பட்டார். அதன் பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர் சட்டை நாதபிள்ளையின் போட்டோப் படங்கள் சிலவற்றைக் கொணர்ந்து நியாயாதிபதியிடம் கொடுத்துவிட்டு சாட்சிக் கூண்டில் ஏறித் தாம் லப்பைத் தெருவிற்குச் சென்று அம்மூவரையும் கைதி செய்த விவரத்தைக் கூறினார். பாரிஸ்டர்: ஏன் ஐயா! இன்ஸ்பெக்டரே குள்ளமாக இருக்கும் கைதி பார்வைக்கு சட்டைநாத பிள்ளையைப் போல இருப்ப தாலும், சட்டைநாத பிள்ளையின் போட்டோப்படம் இவரைப்