பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 233 கமாலுதீன்:- ஒ! முடியும். ஜட்ஜ்:- உமக்கும் உம்முடைய தம்பிக்கும் சுன்னத் முதலிய சடங்குகள் ஆகியிருக்கின்றனவா? கமாலுதீன்:- அந்தச் சடங்குகளைச் செய்து கொள்ளாத முஸ்லீம்களும் இருப்பார்களா? - என்றார். அவ்வளவோடு ஜட்ஜியின் கேள்விகள் முடிந்தன. அவர் அவ்வளவோடு நிற்க, சர்க்கார் வக்கீலான ராயர் எழுந்து நியாயாதி பதியைப் பார்த்து, "கோர்ட்டார் அவர்கள் ஒரே ஒரு முக்கியமான விஷயம் அனுமதிக்க வேண்டும். நாங்கள் கை ரேகைகளைக் கொண்டும், போட்டோப் படத்தைக் கொண்டும், நேரே பார்த்துள்ள மனிதரைக் கொண்டும், இவர் தான் சட்டைநாத பிள்ளை என்று ருஜூப்படுத்தி விட்டோம் ஆயினும், ஜட்ஜ் துரையின் திருப்தியின் பொருட்டு இன்னொரு காரியமும் செய்யக் கோருகிறோம். இதற்கு முன் சட்டைநாத பிள்ளை சிறைச்சாலை யில் இருந்த போது சிறைச்சாலை நிஜாரோடு இருந்த நிலைமையில் எடுத்த படம் ஒன்று தங்களிடம் இருக்கிறது. இவர் தம்முடைய வீட்டில் இருந்த போது, பட்டுக்கரை வஸ்திரங்கள், சட்டை, தலைப்பாகை முதலியவை போட்டுக் கொண்டு எடுத்த படம் ஒன்று இருக்கிறது. அந்த உடைகளெல்லாம் இதோ தருவிக்கப் பட்டிருக்கின்றன. இவருடைய துருக்க உடைகளை விலக்கச் செய்து, முதலில் நிஜாரைப் போட்டு நிற்கவைத்து, இவரையும் படத்தையும் பாருங்கள். பிறகு, வீட்டில் இருந்தது போல சட்டை, தலைப்பாகை, ஜரிகை வஸ்திரங்கள் முதலியவைகளை அணிவித்து, அது இருக்கும் படத்தை வைத்துக்கொண்டு ஒத்திட்டுப் பாருங்கள். உடனே கோர்ட்டாரின் மனம் நிச்சயமான முடிவிற்கு வந்துவிடும் என்றார். உடனே பாரிஸ்டர் சிவசிதம்பரம் பிள்ளை எழுந்து, "கோர்ட்டார் அவர்கள் இந்த வேண்டுகோளுக்கு அனுமதி தரக்கூடாது. இதை நான் பலமாக ஆட்சேபிக்கிறேன். என் கட்சிக்காரர் ஏழையாக இருந்தாலும், கண்ணியமாக ஜீவனம் செய்யும் வர்த்தகர். அவர் எவ்வித குற்றமும் செய்ததாக ருஜூ ஆகாதிருக்கையில் அவருக்கு